வானொலியிலே (நூல்)
Jump to navigation
Jump to search
தமிழின் சிறப்பு | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கட்டுரை |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1947 |
பக்கங்கள் | 78 |
வானொலியிலே என்னும் நூல்,கி. ஆ. பெ. விசுவநாதம் திருச்சி வானொலியில் பேசிய பேச்சுக்கள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் அவரது ஏழு பேச்சுக்கள் அடங்கியுள்ளன. இப்பேச்சுக்கள் ஏழும் 20 ஆம் நூற்றாண்டின் 40களில் ஒலிபரப்பானவை. இது 68 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு நூல். தமிழர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. நாவலர் சோமசுந்தர பாரதியார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.
உள்ளடக்கம்
இந்நூலில் அடங்கியுள்ள ஏழு பேச்சுக்களின் தலைப்புக்கள் பின்வருமாறு:
- தகுதியும் திறமையும்
- ஜாதி முறை
- காவிரியும் உறையூரும்
- பர்மாவும் அரிசியும்
- வியாபாரம்
- பொங்கல் விழா
- ஜப்பான் மெயின் காம்ப்