வாசுகி கணேசானந்தன்
இயற்பெயர் | வி. வி. கணேசானந்தன் V. V. Ganeshananthan |
---|---|
பிறந்ததிகதி | 1980 (அகவை 43–44) |
பணி | எழுத்தாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | ஆர்வர்டு கல்லூரி (இளங்கலை) அயோவா பல்கலைக்கழகம் (முதுகலை) ஊடகவியலுக்கான கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை) |
இணையதளம் | vasugi |
வாசுகி கணேசானந்தன் (V. V. "Sugi" Ganeshananthan, பிறப்பு: 1980) அமெரிக்க ஆங்கிலப் புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், ஊடகவியலாளரும் ஆவார்.[1] இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது ஆக்கங்கள் கிரந்தா, தி வாசிங்டன் போஸ்ட் உட்படப் பல முன்னணிப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
இலங்கை, வட அமெரிக்காவைப் பின்னணியாகக் கொண்டு வாசுகி எழுதிய லவ் மேரேஜ் (காதல் கல்யாணம்) என்ற புதினம் ஏப்ரல் 2008-இல் வெளியிடப்பட்டது. இப்புதினம் 2008 ஆம் ஆண்டின் சிந்த புத்தகங்களில் ஒன்றாக தி வாசிங்டன் போஸ்ட் பெயரிட்டது. அத்துடன் ஆரஞ்சுப் பரிசுக்கான நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. "பார்ன்ஸ்-நோபல்" புதிய எழுத்தாளர்களின் பெரும் கண்டுபிடிப்பு" தேர்வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.[2]
இவரது "பிரதர்லெஸ் நைட்" (சகோதரன் இல்லாத இரவு) என்ற இரண்டாவது புதினம், இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்க ஆண்டுகளைக் கதைக்களமாக அமைக்கப்பட்டது. 2023 சனவரியில் பென்குயின் ரேண்டம் ஹவுசு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது த நியூயார்க் டைம்ஸ் ஆசிரியரின் பரிந்துரைப் புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] இந்நூல் 2024 ஆம் ஆண்டு புனைவுகளுக்கான கரோல் சீல்ட்சு பரிசையும்,[4] 2024 ஆம் ஆண்டிற்கான புனைகதைக்கான பெண்கள் பரிசையும் பெற்றது.[5].[6]
வாழ்க்கைக் குறிப்பு
வாசுகி கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஆர்வர்டு கல்லூரியில் 2002-ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்து, அயோவா பல்கலைக்கழகத்தில் 2005-ஆம் முதுகலைப் பட்டத்தையும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் 2007-ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மிச்சிகன் பல்கலைக்க்ழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] 2015 முதல், மின்னசொட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2]
தெற்காசியப் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய வாசுகி, இப்போது ஆசிய அமெரிக்க எழுத்தாளர்கள் பட்டறை வாரியத்திலும், ஆர்வர்டு கிரிம்சன் பட்டதாரி வாரியத்திலும் பணியாற்றுகிறார்.
நூல்கள்
- லவ் மேரேஜ் (புதினம், 2008)[7][8]
- பிரதர்லெஸ் நைட் (புதினம், 2023)[9][10]
மேற்கோள்கள்
- ↑ Ranasinha, Ruvani (2016). Contemporary Diasporic South Asian Women's Fiction: Gender, Narration and Globalisation. Springer. பக். 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781137403056. https://books.google.com/books?id=NVxBDAAAQBAJ&q=Ganeshananthan+1980&pg=PA119.
- ↑ 2.0 2.1 2.2 "Biography". http://vasugi.com/biography/.
- ↑ Penguin Random House. "Brotherless Night by V. V. Ganeshananthan". Penguin Random House. https://lithub.com/brotherless-night-friends-v-v-ganeshananthan-with-curtis-sittenfeld-and-whitney-terrell-on-editing-a-work-in-progress/.
- ↑ Josh O'Kane, "American author V. V. Ganeshananthan wins $150,000 Shields Prize". The Globe and Mail, May 13, 2024.
- ↑ Creamer, Ella (2024-04-24). "Anne Enright, Kate Grenville and Isabella Hammad shortlisted for Women’s prize for fiction". தி கார்டியன். https://www.theguardian.com/books/2024/apr/24/womens-prize-for-fiction-shortlist-anne-enright-kate-grenville-isabella-hammad.
- ↑ "Announcing the 2024 Winners of the Women’s Prizes". The Women's Prize, June 13, 2024.
- ↑ Cicatrix (23 April 2008). "Q&A with V.V. Ganeshananthan, author of "Love Marriage"". Sepia Mutiny. http://www.sepiamutiny.com/sepia/archives/005157.html.
- ↑ Ganeshananthan, V.V. (13 July 2008). "I Wrote a Story, Not the Whole Story". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/07/11/AR2008071102389.html.
- ↑ Fiction Non Fiction (5 January 2023). "Brotherless Night & Friends: V.V. Ganeshananthan with Curtis Sittenfeld and Whitney Terrell on Editing A Work in Progress". Lithub. https://lithub.com/brotherless-night-friends-v-v-ganeshananthan-with-curtis-sittenfeld-and-whitney-terrell-on-editing-a-work-in-progress/.
- ↑ Penguin Random House. "Brotherless Night by V. V. Ganeshananthan". Penguin Random House. https://lithub.com/brotherless-night-friends-v-v-ganeshananthan-with-curtis-sittenfeld-and-whitney-terrell-on-editing-a-work-in-progress/.