வழுக்களின் வகைகள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழில் வழு என்பது ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது இலக்கண முறையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் வழு எனப்படும்,
வழு எட்டு வகைப்படும்.அவையாவன
வழு வகைகள்
- திணை வழு - எ.கா -என் அத்தை வந்தது
- பால் வழு - எ.கா -கோவலன் வந்தாள்
- இட வழு - எ.கா - கமலா சிரித்தாய்
- காலவழு - எ.கா - கரிகாலன் நேற்று வருவான்
- வினா வழு - கன்று ஈன்றது எருதுவா? பசுவா?
- விடை வழு - எ.கா -நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற வினாவுக்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு
- மரபு வழு - எ.கா - சிங்கம் பிளிறும்
- எண் வழு - குயில்கள் கூவியது (இதனை ஒன்றன் பால் அல்லது பலவின் பால் என்ற அடைப்படையில் நோக்கப்பட்டு வழு ஏழு வகை எனவும் குறிப்பிடுவர்
கருவி நூல்கள்
நன்னூல் - உலக தமிழாராய்ச்சி மையப் பதிப்பு
சமச்சீர் 9 வகுப்பு இரண்டாம் பருவம் பக்க எண் 20