வள்ளி (தெய்வம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வள்ளி
முருகன் வீதி உலா.jpg
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
தேவநாகரிபழனிமலை
தமிழ் எழுத்து முறைவள்ளி
இடம்பழனிமலை
துணைமுருகன்

வள்ளி (Valli) தமிழ் கடவுளான முருகனின் மனைவி ஆவார். முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி.[சான்று தேவை] குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான்.[1]

இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம்.

சங்கப்பாடல்களில் வள்ளித்தெய்வம்

வள்ளி வள்ளல் என்பதன் பெண்பால், வள்ளல்-முருகப்பெருமானின் மனைவி, வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது கதை.

  • தேன் இருக்கும் வள்ளிமலர்[2]
  • முருகப்பெருமான் நறுமலர் வள்ளிப்பூ நயந்தவன்[3]
  • குறிஞ்சிக் குறவர் மறங்கெழு வள்ளி தமர்(உறவினர்)[4]
  • முருகப்பெருமானின் ஆறு முகங்களில் ஒன்று வள்ளியம்மையைப் பார்த்துப் புன்னகை பூத்துக்கொண்டிருந்த்தாம்.[5]
  • மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர் (எனக் கண்ணகியை மலைக்குறவர் விளித்தனர்)[6]

மேற்கோள்கள்

  1. திருமுருகன் கலைக்களஞ்சியம் பக்கம் 83
  2. முருகு புணர்ந்து இயன்ற வள்ளி - நற்றிணை 82-4,
  3. பரிபாடல் 14-22
  4. பரிபாடல் 9-67,
  5. ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசும்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே - திருமுருகாற்றுப்படை 102
  6. சிலப்பதிகாரம் 24-1-3

வெளி இணைப்புகள்

[1]

"https://tamilar.wiki/index.php?title=வள்ளி_(தெய்வம்)&oldid=133115" இருந்து மீள்விக்கப்பட்டது