வரப்போகும் சூரியனே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வரப்போகும் சூரியனே
இயக்கம்எஸ். கருப்புசாமி
தயாரிப்புசி. ஆர். இராஜன்
கதைஎஸ். கருப்புசாமி
இசைதேவா
நடிப்புதிரிவிக்ரம்
பிரியாஞ்சலி
ஒளிப்பதிவுஅகிலன்
படத்தொகுப்புமோகன்
சுப்பு
கலையகம்திவ்யசேத்ரா பிலிம்ஸ்
வெளியீடு5 ஆகத்து 2005
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வரப்போகும் சூரியனே (Varapogum Sooriyane) என்பது 2005 ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். எஸ். கருப்புசாமி இயக்கிய இப்படத்தில், முன்னணி வேடங்களில் திரிவிக்ரம் மற்றும் பிரியஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆகூதி பிரசாத், ரமேஷ் கண்ணா, துரைப்பாண்டியன், சீதா, சத்தியப்பிரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சி. ஆர். ராஜன் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் 2005 இல் வெளியிடப்பட்டது.[1][2]

கதை

திரைப்படம் ஒரு கிராம பஞ்சாயத்துடன் துவங்குகிறது, கல்வியறிவற்ற தொழிலாளி சண்முகத்தை ( ஆகூதி பிரசாத் ) திருமணம் செய்ததற்காக கிராமத் தலைவர் தனது மகள் அன்னபூர்ணியை ( சீதா ) ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் . தனது மகனைப் பெற்றெடுத்த பிறகு, அன்னபூரணி இறந்துவிடுகிறார். ஆனால் இறப்பதற்கு முன் கணவரிடம் தங்கள் மகனை படித்த, மரியாதைக்குரியவனாக ஆக்கவேண்டும் என்ற வாக்கைப் பெறுகிறார்.

பல ஆண்டுகள் கழிந்த பிறகு, சண்முகத்தின் மகன் சக்திவேல் (திரிவிக்ரம்) நன்கு படிக்கும் மாணவராக, முதுகலைப் பட்டப்படிப்பை முடிக்கிறான். தனது மகன் இந்தியக் காவல் பணி அதிகாரியாக வேண்டும் என்று சண்முகம் விரும்புகிறார். உள்ளூர் பணக்கார நில உரிமையாளரின் மகள் கவிதா (பிரியஞ்சலி) சக்திவேலைக் காதலிக்கிறாள். தனது மகள் ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் கவிதாவின் தந்தை (துரைபாண்டியன்), சக்திவேலை தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார். முதலில் தயக்கம் காட்டிய சக்திவேல் சண்முகத்தின் வற்புறுத்தலுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொள்கிறான். இதற்கிடையில், கவிதாவின் மாமன் கருப்புசாமி ( ரமேஷ் கண்ணா ) கவிதாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். சக்திவேலுக்கும் கவிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. பின்னர் சக்திவேல் தில்லியில் ஐபிஎஸ் நேர்காணலில் கலந்து கொள் செல்கிறான். திருமண நாளான்று, கிராமத்திற்குத் திரும்பிவரும் சக்திவேல் தான் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கிறான். இதனால் கவிதாவின் தந்தை திருமணத்தை நிறுத்திவிடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று கருப்புசாமி சக்திவேலையும் அவரது தந்தையையும் கிராமவாசிகள் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்.

சிறு வயதிலிருந்தே தன்னைக் கவனித்துக் கொண்ட தனது ஆசிரியரின் (கௌதமி வெம்புநாதன்) இறுதி சடங்குகளை தான் செய்ய வேண்டியிருந்தது என்று சக்திவேல் தனது தந்தைக்கு விளக்குகிறார். எனவே, நேர்முகத் தேர்வில் தன்னால் கலந்து கொள்வதற்காக அந்த நேரத்தில் தன்னால் செல்ல முடியவில்லை என்கிறான். சக்திவேல் தனது தந்தைக்கும் காதலிக்கும் தான் ஐபிஎஸ் அதிகாரியாக ஆவதாக உறுதியளித்ததை நிறைவேற்ற, நேர்காணலில் கலந்து கொள்ள இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. நேர்காணல் நாளில், கருப்புசாமி சக்திவேலைக் கொல்ல குண்டர்களை அனுப்புகிறார். ஆனால் சக்திவேல் அவர்கள் அனைவரையும் வெல்கிறார். நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் சக்திவேல் காவல் அதிகாரி சீருடையில் கிராமத்திற்குத் திரும்புகிறார். இதைக்கண்டு கிராமவாசிகள் சக்திவேலைப் புகழ்ந்து அவனது தந்தையையும் பெருமைப்படுத்துகிறார்கள். கருப்புசாமி சண்முகத்திடம் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். கவிதாவின் தந்தை திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

நடிகர்கள்

  • திரிவிக்ரம் சக்திவேலாக
  • பிரியாஞ்சலி கவிதாவாக
  • அகுதி பிரசாத் சண்முகமாக
  • ரமேஷ் கண்ணா கருப்பசாமியாக
  • துரைப்பாண்டியன் கவிதாவின் தந்தையாக
  • சீதா அண்ணபூரணி
  • சத்தியப்பிரியா கருப்பசாமியின் தாயாக
  • செம்புலி ஜெகன் கருப்புசாமியின் நண்பர் வெள்ளைச்சாமியாக
  • கடுகு இரமமூர்த்தி கருப்புசாமியின் நண்பர் கடுகாக
  • டான்சர் கோபி கருப்புசாமியின் நண்பர் ஆடாக
  • தேவன் காவல் ஆணையராக
  • நம்பிராஜன் அண்ணபூரணியின் தந்தையாக
  • பாலு ஆனந்த் பாலு ஆனந்தாக
  • அஜய் ரத்னம் அதிகாரியாக
  • கௌதமி வேம்புநாதன் ஆசிரியராக
  • அஞ்சலி தேவி கவிதாவின் தாய் தனலட்சுமியாக
  • செல்லதுரை போக்குவரத்து அதிகாரியாக
  • பயில்வான் ரங்கநாதன் தலைமைக் காவலராக
  • வெள்ளை சுப்பையா பூசாரியாக
  • திருப்பூர் இரமசாமி செய்தித்தாள் போடுபவராக
  • கோவை செந்தில் கிராமத்தானாக
  • ஸ்ரீதர் சிறப்புத் தோற்றத்தில்

தயாரிப்பு

கே. பாக்யராஜ், விக்ரமன், வி. சேகர், அர்ஜூன் சர்ஜா ஆகியோரிடம் உதவியாளராக இருந்த எஸ். கருப்பசாமி திவ்யாஷேத்ரா பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட வரப்போகும் சூரியானே படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். அவர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க புதிய ஜோடியாக டோலிவுட்டைச் சேர்ந்த திரிவிக்ரம் மற்றும் பிரியஞ்சலி ஆகியோரை அறிமுகப்படுத்தினார். கதா நாயகியின் தந்தையாக நடிக்க தெலுங்கு நடிகரான அஹூதி பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். சீதா நாயகனின் தாயாக நடித்தார். "ஒரு மகன் தன் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும், ஒரு தந்தை மகனை வளர்க்கும் விதம் பற்றியும் படம் கூறுகிறது" என்று படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் எழுதிய இயக்குனர் எஸ். கருப்புசாமி கூறினார்.[3][4]

இசை

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 2005 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் பாடல்களுக்கான வரிகளை பா. விஜய், சினேகன், கலைக் குமார், விஜயசாகர் ஆகியோர் எழுதிய 6 பாடல்கள் இருந்தன.

பாடல்கள்
# பாடல் நீளம்
1. "ஆராரோ"   4:13
2. "குக்கூ கொக்கரக் கோழி"   4:16
3. "என் உதடு என்ன"   4:11
4. "வெள்ளைக்காரா வெள்ளைக்காரா"   3:54
5. "நுங்கு விக்கிற கண்ணம்மா"   4:18
6. "கட்டிகிட்டா"   3:35
மொத்த நீளம்:
24:27

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வரப்போகும்_சூரியனே&oldid=37376" இருந்து மீள்விக்கப்பட்டது