வடமராட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Region வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi), என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.

குடத்தனை மணற்குன்றுகள்

வடமராட்சிப் பகுதியானது வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி தென்மேற்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெயர்

வடமராட்சி என்பது "வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும்[1]. இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர். முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று.

வடமராட்சியில் உள்ள ஊர்கள்

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வடமராட்சி&oldid=40078" இருந்து மீள்விக்கப்பட்டது