லட்சுமி ராஜரத்தினம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
லட்சுமி ராஜரத்தினம் |
---|---|
பிறந்ததிகதி | மார்ச்சு 27, 1942 |
பிறந்தஇடம் | திருச்சி |
இறப்பு | பெப்ரவரி 8, 2021 | (அகவை 78)
குடியுரிமை | இந்தியர் |
பிள்ளைகள் | ராஜஸ்யாமளா |
லட்சுமி ராஜரத்தினம் (பிறப்பு: மார்ச் 27 1942, மறைவு: பிப்ரவரி 8, 2021) என்பவர் தமிழ் எழுத்தாளராவார். புதினங்கள், சரித்திரச் சிறுகதைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்குப் புகழ்பெற்றவர்.[1] இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட புதினங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்சி நாடகங்கள், 3 தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், 3,500க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டு திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் பாடியுள்ளார்.[3]
குடும்பம்
இவர் திருச்சியில் 1943 ஆண்டு ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் பிறந்தார். முனைவர் பட்டமும் வாங்கியவர். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனை, கோயம்புத்தூர், தஞ்சை என கச்சேரிகள் செய்துள்ளார். இவருக்கு ராஜஸ்யாமளா என்ற ஒரு மகள் உள்ளார். மகளின் நாட்டியத்துடன் இவர் பல முறை பாடியுள்ளார்.
விருதுகள்
1991 இல் எழுத்துக்காகவும், 1993 இல் ஆன்மிகச் சொற்பொழிவுக்காகவும் காஞ்சி சங்கர மடத்தால் கவுரவிக்கப்பட்டார். 1999 இல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002 இல் கொழும்பு இந்து மகா சபையில் இவருக்கு 'சொற்சுவை நாயகி' என்ற விருதினைப் பெற்றார். கலைமகள் பத்திரிக்கை இவருக்குச் சிறந்த எழுத்தாளர் விருதை ஜனவரி 2019 இல் கொடுத்தது. இவரின் இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்றது.
குறிப்பிடத்தக்க நாவல்கள்
- இதயக்கோயில்
- அகலிகை காத்திருந்தாள்
- பாட்டுடைத் தலைவி
- அவள் வருவாளா?
- என்னைக் கொன்றவன் நீ
மேற்கோள்கள்
- ↑ "பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார்". https://www.hindutamil.in/news/literature/632037-writer-lakshmi-rajaratnam-passed-away-1.html. பார்த்த நாள்: 16 February 2021.
- ↑ "LAKSHMI RAJARATHNAM". https://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam. பார்த்த நாள்: 16 February 2021.
- ↑ "காலமாணார் எழுத்தாளர் லெட்சுமி ராஜரத்தினம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/feb/11/writer-lakshmi-rajaratnam-passed-away-3560870.html. பார்த்த நாள்: 16 February 2021.