லங்கா தகன்
Jump to navigation
Jump to search
லங்கா தகன் | |
---|---|
இயக்கம் | தாதாசாகெப் பால்கே |
தயாரிப்பு | துண்டிராஜ் கோவிந்த் பால்கே |
கதை | துண்டிராஜ் கோவிந்த் பால்கே |
மூலக்கதை | இராமாயணம் படைத்தவர் வால்மீகி |
நடிப்பு | அண்ணா சானுகே கணபதி ஜி. ஷிண்டே |
ஒளிப்பதிவு | டிரிம்பக் பி. தெலாங் |
வெளியீடு | 1917 |
நாடு | இந்தியா |
மொழி | ஊமைப்படம் மராத்திய மொழி |
லங்கா தகன் (English: Lanka Aflame) என்பது 1917 இல் வெளிவந்த இந்தியா ஊமைத் திரைப்படமாகும். இதனை தாதாசாகெப் பால்கே இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதையானது வால்மீகி எழுதிய இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படம் பால்கேவின் இரண்டாவது திரைப்படமாகும். அவர் ராஜா ஹரிஸ்சந்திரா என்ற திரைப்படத்தை 1913 இல் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பால்கே நிறைய குறும்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.[1]
ஆதாரங்கள்
- ↑ Mankekar, Purnima (1999). Screening Culture, Viewing Politics: An Ethnography of Television, Womanhood, and Nation in Postcolonial India. Duke University Press. பக். 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0822323907. https://books.google.com/books?id=fZf8wmVdpaIC&pg=PA375&lpg=PA375&dq=lanka+dahan+1917&source=bl&ots=bHxVF_gXuL&sig=VxIaNAxdXO5hrgI33p-ceuGZzYM&hl=en&sa=X&ei=d15tUOm7OIPSrQeDrYHABw&sqi=2&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lanka%20dahan%201917&f=false. பார்த்த நாள்: 4 October 2012.