ரோகினி ஹட்டங்காடி
ரோகினி ஹட்டங்காடி | |
---|---|
ரோகினி ஹட்டங்காடி | |
பிறப்பு | ரோகினி ஓக் 11 ஏப்ரல் 1951 புனே, மகாராட்டிரம், இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1975 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஜெயதேவ் ஹட்டங்காடி (1977–2008; அவரது இறப்பு வரை); 1 குழந்தை |
ரோகினி ஹட்டங்காடி (Rohini Hattangadi) 1955 ஏப்ரல் 11 அன்று பிறந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார், ஒரு தேசிய திரைப்பட விருது, மற்றும் 1982இல் வெளிவந்த காந்தி திரைப்படத்தில் கஸ்தூரிபாய் காந்தி வேடத்தில் நடித்ததற்காக "பாஃப்டா" (BAFTA) விருதை வென்ற ஒரே இந்திய நடிகை ஆவார்.[1] 1978 ஆம் ஆண்டில் '"அரவிந்த் தேசாய் கி அஜீப் தஸ்தான் படத்தில் அறிமுகமானபோது, ஹட்டங்காடி புது தில்லியின் தேசிய நாடக பாடசாலையின் ஒரு முன்னாள் மாணவி ஆவார், 1978 இல் படத்தில் அறிமுகமானபோது ஹட்டங்காடி முக்கியமாக நாடக அரங்குகளில் பணிபுரிந்தார். "அர்த்" (1982), "பார்ட்டி" (1984) மற்றும் "சாரான்ஷ்" (1984) போன்ற அவரது திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க சினிமா பாத்திரங்கள் இருந்தன. "காந்தி" படத்தில் நடித்ததன் பின்னர் ஹட்டங்காடி முக்கிய இந்தி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், பெரும்பாலும் வயதான தாயின் பாத்திரங்களில் நடிக்கிறார். அவர், 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார், மேலும் நாடக மற்றும் தொலைக்காட்சியில் செயல் பாட்டில் உள்ளார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி
ஹட்டங்காடி புனே "ரோஹினி ஓக்" என்ற இடத்தில் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் புனே, ரேணுகா ஸ்வரூப் நினைவு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்.[3] ரோகினி மற்றும் ஜெயதேவ் ஆகியோருக்கு ஒரு நாடக நடிகரான, அசிம் ஹட்டங்காடி, என்ற மகன் இருக்கிறார். இவர் "பாடல் சிர்காரின்" நாடகமான "இவாம் இந்த்ரஜித்" என்ற நாடகத்தில் நடித்துள்ளார். இதை இயக்கியவர் இவரது தந்தை ஜெயதேவ் ஆவார்.[4] ஜெய்தேவ் ஹட்டங்கடி, டிசம்பர் 5, 2008 இல், புற்றுநோயுடன் போராடி 60 வயதில் இறந்தார்.[5]
தொழில்
நாடகம்
ரோகினி தனது நாடகத் தொழிலை மராத்திய மொழியில் தொடங்கினார், பம்பாயில் என்.எஸ்.டியில் இருந்தபோதும், ஜெயதேவ் மற்றும் ரோகினி ஆகியோர் பம்பாயில் மராத்தி நாடக குழுவான "அவிஷ்கர்" என்று அழைக்கப்பட்ட நாடக நிறுவனத்தை நடதி வந்தனர், இது 150 க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியது.[6]
திரைப்படம்
ஹட்டங்காடி 1978 ஆம் ஆண்டில் சயீத் அக்தர் மிர்ஸாவின் "அரவிந்த் தேசாய் கி அஜீப் தஸ்தான்" என்ற திரைப்படத்துடன் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.[2]
இவரது அடுத்தத் திரைப்படம் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய மகாத்மா காந்தியின் சுயசரிதைப் படமான "காந்தி" (1982), ஆகும், இதில்காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி வேடத்தில் நடித்திருந்தார். , இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி பெற்றது, மேலும் பிற விருதுகளுக்கு மத்தியில் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது வென்றது.[7] இதில் நடித்ததற்காக "பாஃப்டா" (BAFTA) விருதை வென்ற ஒரே இந்திய நடிகை ஆவார்.[1]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 [1] BAFTA.
- ↑ 2.0 2.1 Kumar, Anuj (2010-06-04). "Cast in a differentmould". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2011-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629031656/http://www.hindu.com/fr/2010/06/04/stories/2010060450340100.htm. பார்த்த நாள்: 2011-02-24.
- ↑ "Alumni put up class act for alma mater", இந்தியன் எக்சுபிரசு, 20 December 2002.
- ↑ "Evam Indrajit". http://www.mumbaitheatreguide.com/dramas/reviews/and_indrajeet.asp.
- ↑ Hay Dev Hattangadi passes away ரெடிப்.காம், 5 December 2008
- ↑ "Awishkar". http://www.mumbaitheatreguide.com/dramas/groups/awishkar.asp.
- ↑ "Only asian to win BAFTA". http://www.tribuneindia.com/2007/20070914/cth2.htm.