ரெட்டை கதிர் (திரைப்படம்)
ரெட்டை கதிர் | |
---|---|
இயக்கம் | ராம்கிசோர் செல்வம் |
இசை | தேவா குமார் |
நடிப்பு | சுப்பு சுமித்தா |
ஒளிப்பதிவு | வாசுதேவன் |
வெளியீடு | 2014 பெப்ரவரி |
மொழி | தமிழ் |
ரெட்டை கதிர் 2014 பெப்ரவரியில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ராம்கிசோர் & செல்வம் இயக்கியுள்ளனர்.[1] இப்படத்தில் சுப்பு, துரை, சுமித்தா போன்ற பலர் நடித்துள்ளனர்.
கதைச்சுருக்கம்
சக்தி மற்றும் சக்திவேல் இருவரும் சிறுவயதில் அனாதையாக்கப்படுகிறார்கள். சக்தி வளர்ந்தவுடன் ஒரு தாதாவின் வளர்ப்புத் தம்பியாக, கல்லூரியில் படித்துக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டு வருகிறார். சக்திவேல் ஆதரவற்றவராக பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற கனவில் ஒரு கல்லூரியில் சேர்கிறார். அங்கு விடுதியில் தங்கும் இவரை, சக மாணவர்கள் இவருடைய தோற்றத்தைப் பார்த்து கேலி-கிண்டல் செய்கிறார்கள்.
ஒருநாள் ஒரு ரவுடி கும்பல் சக்திவேலிடம் வம்பிழுத்து அவரை அடித்து விடுகிறார்கள். அவர் வழியில் செல்லும்போது மயங்கி விழுகிறார். அந்த வழியாக வரும் அதே கல்லூரியில் படிக்கும் அபிராமி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார். இதனால் அபிராமி மீது காதல் வயப்படுகிறார். இதற்கிடையில் வேறொரு கல்லூரியில் படிக்கும் சக்தி, தன் அண்ணனின் கட்டளையால் ஒரு கல்லூரியை அழிக்க, அந்த கல்லூரிக்கு மாற்றலாகி போகிறார்.
சக்தி சேர்ந்த கல்லூரியில் தான் சக்திவேல் மற்றும் அபிராமி படிக்கிறார்கள். ஒருநாள் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் விபத்து ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறார் சக்தி. அந்த விபத்தில் ஒரு ஆசிரியருக்கு அடிப்பட்டு விடுகிறது. இதற்கு நிருவாகம்தான் காரணம் என்று சக்தி, மாணவர்களை த்திரட்டி போராட்டம் பண்ணுகிறார். இந்த முயற்சி தோல்வி அடைகிறது. இதனை பார்க்கும் அபிராமி சக்தி மீது காதல் வயப்படுகிறார்.
இறுதியில் சக்தி அந்த கல்லூரியில் கலவரத்தை ஏற்படுத்தினாரா, சக்திவேல் அபிராமியின் காதலைப் பெற்றாரா இல்லை, அபிராமி சக்தியை காதலிக்க வைத்தாரா என்பதே மீதிக்கதை.