ரீட் அலாங்
| உருவாக்குனர் | கூகுள் |
|---|---|
| தொடக்க வெளியீடு | மார்ச்சு 6, 2019 |
| அண்மை வெளியீடு | 0.5.607317860 (ஆண்ட்ராய்டு)[1] / பெப்ரவரி 19, 2024 |
| தளம் | ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி |
| மென்பொருள் வகைமை | கூகுள் பிளே, இணையம் |
| இணையத்தளம் | readalong |
முன்பு போலோ என்று அழைக்கப்பட்ட ரீட் அலாங் (Read Along), குழந்தைகளுக்காக கூகுள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு இயக்க முறைமைக்கான மொழிக் கற்றல் பயன்பாடாகும். இந்த பயன்பாடு மார்ச் 7,2019 இல் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்டது.[2][3][4] விளக்கப்பட்ட கதைகள் மூலம் குழந்தைகள் படிக்க கற்றுக்கொள்ள உதவும் தியா என்ற கதாபாத்திரம் இதில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்திய முக்கிய மொழிகளான இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் உருது மொழிகளையும், எசுப்பானியம், போர்த்துகீசியம் மற்றும் அரபு மொழி கற்கும் வசதி இதில் உள்ளது.
தொழில்நுட்பம்
இந்தச் செயலி உரையினைப் பேச்சாக மாற்றும் பேச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த வசதியின் மூலம் தியா என்ற கதாபாத்திரம் கதையைப் படிக்கிறது. இது உரைக்கும் பயனரின் வாசிப்புக்கும் இடையிலான பொருத்தங்களை இயந்திர ரீதியாக அடையாளம் காட்டுகிறது. சோட்டா பீம் மற்றும் கதா கிட்ஸ் கதைகள் செப்டம்பர் 2019 இல் சேர்க்கப்பட்டன.[5] ஏப்ரல் 2020 இல், பயன்பாட்டின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.[6] செப்டம்பர் 2020 இல், மொழி விருப்பத்தில் அரபு மொழி சேர்க்கப்பட்டது.[7] இதன் கணினிப் பதிப்பு ஆகஸ்ட் 2022 இல் தொடங்கப்பட்டது.[8]
மேற்கோள்கள்
- ↑ "Read Along by Google APKs". APKMirror (in ஆங்கிலம்). Retrieved April 10, 2024.
- ↑ "'Google Read Along' to help 10 million UP school kids improve pronunciations" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். 8 August 2020. https://www.hindustantimes.com/education/google-bolo-to-help-10-million-up-school-kids-improve-pronunciations/story-dQy0BnOKDAR5YoEwMYbD3K.html.
- ↑ "'Google Bolo' to teach UP kids how to pronounce" (in en). Free Press Journal. 13 August 2020. https://www.freepressjournal.in/technology/google-bolo-to-teach-up-kids-how-to-pronounce.
- ↑ "Google introduces educational app Bolo to improve children's literacy in India". TechCrunch. 6 March 2019. https://techcrunch.com/2019/03/06/google-introduces-educational-app-bolo-to-improve-childrens-literacy-rates-in-india/.
- ↑ "Google Lens, Bolo App Get Additional Indic Language Support" (in en). NDTV Gadgets 360. 19 September 2019. https://gadgets.ndtv.com/apps/news/google-lens-bolo-app-indic-language-support-added-google-for-india-2019-2103627.
- ↑ "Google Bolo Goes Global as 'Read Along' to Help Kids Learn Reading" (in en). NDTV Gadgets 360. 8 May 2020. https://gadgets.ndtv.com/apps/news/google-read-along-bolo-learn-reading-2225584.
- ↑ "Google adds Arabic to Read Along app to improve children's reading" (in en). The National (Abu Dhabi). 8 September 2020. https://www.thenationalnews.com/business/technology/google-adds-arabic-to-read-along-app-to-improve-children-s-reading-1.1074690.
- ↑ Chin, Monica (August 9, 2022). "Google launches new website for kids learning to read". The Verge. Archived from the original on August 9, 2022. Retrieved August 10, 2022.