ரியா பாம்னியாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரியா பம்னியாள்
பிறந்தது
தொழில்(கள்) மாடல், நடிகை
ஆண்டுகள் செயலில் 2007 - தற்போது

ரியா பாம்னியாள், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகையாவார். 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக திரைப்படங்களில் அறிமுகமானார்.தமிழ் திரைப்படமான, குளிர் 100° [1] என்பதே இவரது முதல் படமாகும். முன்னதாக எம்டிவி தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட யதார்த்த நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் மூன்றாவது பகுப்பில் பட்டத்தை வென்றுள்ளார், 2011 ஆம் ஆண்டில், ரியாவுக்கு லவ் கா தி எண்ட் என்ற இந்தி படத்தில் நடித்து அங்கேயும் அறிமுகம் ஆகியுள்ளார்.[2]

பல மொழிகளிலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரியா அக்டோபர் 28, 1987 இல் பிறந்துள்ளார். வித்தியாசமான வேடங்களிலோ, பிராந்திய மொழிப் படங்களிலோ நடிப்பதில் எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ள இவர், தற்போது விளம்பரத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள்
2009 குளிர் 100° தான்யா தமிழ்
2011 லவ் கா தி எண்ட் நடாஷா ஓபராய் ஹிந்தி
2023 நம்ம கல்யாணி படப்பிடிப்பில் உள்ளது கன்னடம்

தொலைக்காட்சி

  • ஸ்ப்ளிட்ஸ்வில்லா (2009 - 2010)
  • யே ஹை ஆஷிகி (2013 - 2016)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரியா_பாம்னியாள்&oldid=23610" இருந்து மீள்விக்கப்பட்டது