ராஜாதி ராஜா (2009 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜாதி ராஜா
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புராதா சக்தி சிதம்பரம்
கதைசக்தி சிதம்பரம்
இசைபாடல்கள்
கருணாஸ்
பின்னணி இசை
பவுல் ஜேக்கப்
நடிப்புராகவா லாரன்ஸ்
காம்னா ஜெத்மலானி
மும்தாஜ்
மீனாட்சி
ஸ்னிக்தா அகொல்கர்
கருணாஸ்
ஒளிப்பதிவுசுரேஷ் தேவன்
படத்தொகுப்புவி. ஜெய் சங்கர்
கலையகம்சினிமா பாரடைஸ்
விநியோகம்சினிமா பாரடைஸ்
வெளியீடுமே 15, 2009 (2009-05-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாதி ராஜா 2009 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், மீனாட்சி மற்றும் மும்தாஜ் நடிப்பில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பாடல்களுக்கான இசையைக் கருணாஸும் பின்னணி இசைக்கோர்ப்பை பவுல் ஜேக்கப்பும் அமைத்து வெளியான தமிழ் திரைப்படம்[1].

கதைச்சுருக்கம்

குற்றாலத்தில் வசிக்கும் ராஜா (ராகவா லாரன்ஸ்) மூன்று லட்சியங்களைக் கொண்டவன். அவனது தந்தைக்குத் தவறான சிகிச்சையளிக்கும் மருத்துவரால் அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுகிறது. தனக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சூழ்ச்சியால் அவருடைய வழக்கு தோல்வியடைகிறது. அவர் மரணத்திற்கு முன் ராஜாவிடம் அவனது மூன்று சகோதரர்களையும் முறையே காவலர், மருத்துவர் மற்றும் வழக்கறிஞராக உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக ராஜா படிக்காமல் வேலைக்குச்சென்று அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்றும் சத்தியம் பெற்று இறக்கிறார். தன் தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றவும், தன் சகோதரர்கள் படிப்புக்காகவும் தன் வாழ்கையைத் தியாகம் செய்கிறான் ராஜா. அவர்களும் படித்து மருத்துவர், காவலர் மற்றும் வழக்கறிஞராக உயர்கின்றனர்.

ரவுடியான சைலு (மும்தாஜ்) அமைச்சராகிறாள். அவளுக்கு ராஜாவின் சகோதர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். இதையறிந்து ஆத்திரப்படும் ராஜா, அவர்களைத் திருந்திவாழக் கோருகிறான். நன்றியற்ற அவனது சகோதரர்கள் மூவரும் அவனை உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் சைலுவுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க முடிவுசெய்கிறான் ராஜா. இறுதியில் ராஜா தன் நோக்கத்தை நிறைவேற்றினானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தில் நமிதா நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் காம்னா ஜெத்மலானி நடித்தார்[2].

இசை

படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் கருணாஸ். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை செய்தவர் இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளரான பவுல் ஜேக்கப்.

  • கந்தா கடம்பா கதிரேசா
  • எலந்தப்பழம் (வேறு இசைக்கோர்வை)
  • யாரோ ஒருத்தி
  • கத்திரிக்கா
  • ஆண்டிப்பட்டி அரசம்பட்டி

சர்ச்சை

சுஹாசினி - சக்தி சிதம்பரம் சர்ச்சை: ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரை விமர்சனம் நிகழ்ச்சியில் சுஹாசினி "ராஜாதி ராஜா" திரைப்படத்திற்கு செய்த விமர்சனத்திற்காக அவர் மீது வழக்கு தொடுப்பதாகக் இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்[3][4].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்