ரம்மி (2014 திரைப்படம்)
ரம்மி | |
---|---|
இயக்கம் | க.பாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | க.குருநாதன் ப.ஏலப்பன் க.பாலகிருஷ்ணன் தர்மராஜன் |
கதை | மோனா பழனிச்சாமி |
திரைக்கதை | க.பாலகிருஷ்ணன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விஜய் சேதுபதி காயத்ரி சங்கர் ஐசுவர்யா ராஜேஸ் இனிகோ பிரபாகரன் |
ஒளிப்பதிவு | சி. பிரேம்குமார் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ[1] |
விநியோகம் | ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் சதீசு குமார் |
வெளியீடு | சனவரி 31, 2014 [2] |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 கோடி |
ரம்மி, 2014 சனவரி 31 ல் வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். விஜய் சேதுபதி, காயத்ரி, ஐசுவர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை க.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்[3]. மேலும் பீட்சா படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
நடிப்பு
- விஜய் சேதுபதி (ஜோசப்)
- இனிகோ பிரபாகரன் (சக்தி)
- சூரி (அருணாச்சலம்)
- காயத்ரி சங்கர் (மீனாட்சி)
- ஐசுவர்யா ராஜேஸ் (சொர்ணம்)
- செண்ட்ராயன்
கதைச்சுருக்கம்
இனிக்கோ பிரபாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குப் படிக்க வருகிறான். அவனுக்குக் கூடப் படிக்கும் பூலாங் குறிச்சி காயத்ரிடன் காதல். இனிக்கோவின் தோழன் விஜய் சேதுபது & சூரி. பக்கத்து ஊரைச் சேர்ந்த சையத் காயத்ரிக்காகவே அதே கல்லூரியில் சேர்கிறான். ஒரு கட்டத்தில் இனிக்கோவுக்கும் சக்திக்கும் மோதல் வெடிக்கிறது. ரவுடிகளைக் கூட்டிப் போய் கல்லூரி விடுதியில் சண்டை போடுகிறான். அதனால் கல்லூரி நிர்வாகம் சையத்தைக் கல்லூரியை விட்டு நீக்குகிறது. சக்தியையும் ஜோசப்பையும் கல்லூரி விடுதியை விட்டு மட்டும் நீக்குகிறது.
அவர்கள் பூலாங்குறிச்சி கிராமத்தில் சூரி உதவியுடன் வீடு எடுத்துத் தங்குகிறார்கள். ஜோசப்புக்கும், ஜஸ்வர்யா என்கிற உள்ளூர்ப் பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஊர்ப் பெரியவருக்கு தன் தம்பி மகளான காயத்ரியின் காதல் விவகாரம் தெரிகிறது. இனிகோ தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த சமயம் ஐசுவர்யாவிற்குக் திருமண ஏற்பாடுகள் நடக்க, விஜய் சேதுபதியும் ஐசுவர்யாவும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். ஐசுவர்யா ஊர்ப் பெரியவரின் மகள் என்பது அப்போதுதான் தெரிய வருகிறது. பெரியவரின் ஆட்கள் ஜோசப்பைக் கொன்று ஐசுவர்யாவை அழைத்து வருகிறார்கள். பெரியவர் ஐசுவர்யாவையும் கொல்லத் துணிகிறார். இதையெல்லாம் காயத்திரி கேட்டுவிடுகிறாள். தனக்கும் இனிகோவிற்கும் இந்த நிலைதான் நடக்கும் எனப் பரிதவிக்கிறாள். ஆனால் அவர்கள் காயத்திரியைப் பார்த்துவிடுகிறார்கள். அவளைத் துரத்துகிறார்கள்.
காயத்திரி - இனிகோ காதல் சேர்ந்ததா, ஐசுவர்யா கொலை செய்யப்பட்டாளா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் க.பாலகிருஷ்ணன். கதை முழுவதும் 1987இல் நடக்கிறது.
சான்றுகள்
- ↑ "ரம்மி படத்தின் காட்சிகள்". moviegalleri.net இம் மூலத்தில் இருந்து 5 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130205211519/http://moviegalleri.net/2013/02/rummy-tamil-movie-stills-vijay-sethupathi-aishwarya-gayathri.html. பார்த்த நாள்: 3 February 2013.
- ↑ "Vijay Sethupathi's 'Rummy' censored" இம் மூலத்தில் இருந்து 2013-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227152337/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-14/news-interviews/45190054_1_rummy-soodhu-kavvum-film. பார்த்த நாள்: 31 சனவரி 2014.
- ↑ "பீட்சாவிலிருந்து ரம்மி வரை!". Behindwoods. http://behindwoods.com/tamil-movie-news-1/dec-12-02/pizza-naduvula-konjam-pakkatha-kaanom-13-12-12.html. பார்த்த நாள்: 13 December 2012.
- ↑ "ரம்மிக்கு பாடிய ரம்யா". Pluz Cinema இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130607181424/http://cinema.pluz.in/news/kollywood/69964/remya-to-sing-in-rummy.htm. பார்த்த நாள்: 18 May 2013.