ரத்னஜீவன் ஹூல்
Jump to navigation
Jump to search
ரத்னஜீவன் ஹூல்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ரத்னஜீவன் ஹூல் |
---|
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இலங்கையில் நன்கு அறியப்பட்ட மின் பொறியியல் பேராசிரியராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றினார். இந்நியமனத்துக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக விடுமுறையில் வெளிநாட்டில் வசிக்கிறார்[1]. விடுதலை புலிகளோ அல்லது அவர்களுக்க்கு சார்பான ஆயுதக் குழுக்களோ இக்கொலை மிரட்டலை விடுத்திருப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பான அமெனிஸ்டி தெரிவித்துள்ளது[2]. ரத்னஜீவன் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜன் ஹூலின் சகோதரர் ஆவார்.
ஆதாரங்கள்
- ↑ "அமெனிஸ்டி அறிக்கை 1" இம் மூலத்தில் இருந்து 2006-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060419220236/http://web.amnesty.org/library/Index/ENGASA370102006?open&of=ENG-LKA.
- ↑ "அமெனிஸ்டி அறிக்கை 2" இம் மூலத்தில் இருந்து 2006-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061005064801/http://www.nearinternational.org/alerts/sri_lanka220060414en.php.