மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில்
மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°34′42″N 78°29′18″E / 9.5784°N 78.4883°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | ருத்ராட்ச சிவன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | மேலப்பெருங்கரை |
சட்டமன்றத் தொகுதி: | பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 104 m (341 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அட்டாள சொக்கநாதர் |
தாயார்: | அங்கயற்கண்ணி |
குளம்: | கிணறு |
சிறப்புத் திருவிழாக்கள்: | கல்யானைக்கு (தைப்பொங்கல் அன்று) கரும்பு கொடுக்கும் விழா, ஐப்பசி அன்னாபிசேகம், சிவராத்திரி, திருக்கிருத்திகை, மார்கழி திருவாதிரை |
உற்சவர்: | பிரதோச நாயனார் |
அட்டாள சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பெருங்கரை ஊராட்சி சார்ந்த மேலப்பெருங்கரை பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] எட்டு யானை உருவங்கள் கருவறை விமானத்தைத் தாங்கும்படியாக இந்த சொக்கநாதர் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், 'அட்டாள சொக்கநாதர் கோயில்' என்றழைக்கப்படுகிறது. கரிக்குருவிக்கு சிவபெருமான் ("தர்மங்கள் செய்பவராக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் பாவங்கள் செய்யக் கூடாது; அப்படி பாவம் செய்வதனால், செய்த தர்மங்களுக்கும் பலனில்லாமல் போய் விடும்"என்ற) உபதேசம் செய்த தலமாகும் இது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 104 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அட்டாள சொக்கநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°34′42″N 78°29′18″E / 9.5784°N 78.4883°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் அட்டாள சொக்கநாதர் மற்றும் தாயார் அங்கயற்கண்ணி ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்; தீர்த்தம் கிணறு ஆகும். காரணாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. அட்டாள சொக்கநாதர், அங்கயற்கண்ணி தாயார், பிரதோச நாயனார், மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சண்டிகேசுவரர், அநுக்ஞை விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், ஐயப்பன், ஆஞ்சநேயர், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, யோக பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ ValaiTamil. "அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
- ↑ "Attala Sokkanathar Temple : Attala Sokkanathar Attala Sokkanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.