முப்பரிமாணம் (2017 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முப்பரிமாணம்
இயக்கம்அதிரூபன்
தயாரிப்புபொள்ளாச்சி வி. விசு
பொள்ளாச்சி கோல்ட் வி. குமார்
கதைஅதிரூபன்
இசைஜீ. வீ. பிரகாஷ் குமார்
நடிப்புசாந்தணு பாக்கியராஜ்
சிருஷ்தி டாங்கே
ஸ்கண்டா அசோக்
ஒளிப்பதிவுராசாமதி
படத்தொகுப்புவிவேக் கர்சன்
கலையகம்சமாலயா கிரியேஷன்ஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடு3 மார்ச் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முப்பரிமாணம் இத்திரைப்படம் 2017 ல் வெளிவந்த காதல் கலந்த சுவாரசியமான திரைப்படமாகும். அதிரூபன் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் சாந்தணு பாக்கியராஜ் மற்றும் சிருஷ்தி டாங்கே ஆகியோரும் இவர்களுடன் ஸ்கண்டா அசோக், ரவி பிரகாஷ் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருந்தனர். ஜீ. வீ. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ராசாமதி இத்திரைபடத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்பட தயாரிப்பு 2015 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு 2017 மார்ச் மாதம் மூன்றாம் திகதி திரையிடப்பட்டது.[1]

நடிகர்கள்

  • சாந்தணு பாக்கியராஜ்- கதிர்
  • சிருஷ்தி டாங்கே- அனுஷா
  • ஸ்கண்டா அசோக்- சந்தோஷ்
  • தம்பி ராமையா - படகு முதளாளி
  • புளோரன் பெரேய்ரா- அனுஷாவின் தந்தை
  • ரவி பிரகாஷ்-அனுஷாவின் மாமா
  • அப்புகுட்டி- லோகு
  • சுவாமிநாதன் - அறிவுடை
  • பி. வி. சந்திரமௌளி- விக்னேஸ்வரன் ஐபிஎஸ் , கதிரின் தந்தை
  • கல்யாணி நடராஜன்- கதிரின் அம்மா
  • ரேகா சுரேஷ் - அனுஷாவின் அம்மா
  • அவிஸ் மனோஜ் குமார் - கதிரின் நண்பன்சிறப்பு தோற்றம்
  • ஆரி
  • ஐஸ்வர்யா ராஜேஷ்
  • ஆர்யா
  • அசோக் செல்வன்
  • வொபி சிம்கா
  • ஜக்கி ஜெரோப்
  • ஜனனி ஜயர்
  • கே. பாக்கியராஜ்
  • கலையரசன்
  • கீர்த்தி விஜய்
  • கிரிஷ்
  • பாண்டியராஜன்
  • பார்த்தீபன்
  • பூர்ணிமா பாக்கியராஜ்
  • பிரபு
  • பிரசன்னா
  • பிரேம்ஜி அமரன்
  • பிருத்வி ராஜன்
  • ராதிகா
  • ராஜேந்திரன்
  • ரம்யா கிருஷ்ணன்
  • சங்கீதா
  • சூரி
  • வெங்கட் பிரபு
  • விதார்த்
  • விஜய் அந்தோணி
  • விவேக்

தயாரிப்பு

2015 இன் ஆரம்பத்தில் சாந்தணு பாக்கியராஜ் அதிரூபன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு கையெழுத்திட்டார். அதிரூபன் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் தன் வாழ்நாளை உயிர்பிக்கவந்த திரைப்படம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்[2] . வெற்றிமாறன் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு ஊக்கமளித்ததுடன் சாந்தணுவை கதாநாயகனாகவும் தெரிவு செய்திருந்தார் [3] . காரணம் சாந்தணு இயல்பாகவே நடிக்ககூடியவர் என்பதாலும் நன்றாக நடனமாடக்கூடியவர் என்பதாலும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத் திரைப்படத்திற்கான திரைக்கதையை ஏழு வருடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படமானது பல தோல்விப்படங்களின் பின் சாந்தணுவிற்கு சிறந்தபடமாக அமைந்துள்ளது.

பின்னூட்டல்கள்