முன்னவிலக்கணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முன்னவிலக்கணி அல்லது முன்னவிலக்கு அணி என்பது ஒரு பொருளை விவரித்து பின் அதனை விலக்குவது (மறுப்பது) என்பதாகும்.


குறிப்பு

"முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூவகைக் காலமும் மேவியது ஆகும்." என்கிறது தண்டியலங்காரம் 43-ம் பாடல்.

வகைகள்

இவ்வணி முக்காலத்திலும் நடக்கும் வினைகளை விலக்குவதும் உண்டு. எனவே:

  1. இறந்தவினை விலக்கு
  2. நிகழ்வினை விலக்கு
  3. எதிர்வினை விலக்கு

என்று எப்போது விலக்குகிறது என்பதை ஒட்டி 3 வகைப்படுத்துவர்.

முன்ன விலக்கணி மூவகைப்படும். 1.இறந்தவினை விலக்கு 2.எதிர்வினை விலக்கு 3.நிகழ்வினை விலக்கு

எடுத்துக்காட்டு

1.இறந்தவினை விலக்கு (எ.கா) பாலன் தன(து) உருவாய் ஏழ்உல(கு) உண்(டு) ஆல்இலையின் மேல்அன்(று) கண்துயின்றாய் மெய்என்பர் -ஆல்அன்(று) வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? சோலைசூழ் குன்(று) எடுத்தாய் சொல்.



"https://tamilar.wiki/index.php?title=முன்னவிலக்கணி&oldid=13553" இருந்து மீள்விக்கப்பட்டது