முனீஸ்வரன் (ஓவியர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முனீஸ்வரன் (ஓவியர்)
முனீஸ்வரன் (ஓவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
முனீஸ்வரன்
பிறந்ததிகதி (1991-09-25)செப்டம்பர் 25, 1991
பிறந்தஇடம் திருமங்கலம், மதுரை
கல்வி இளங்கலை பட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி
அறியப்படுவது தத்ரூப பாணி ஓவியங்கள்
பெற்றோர் சக்திவேல் -மங்களம்

முனீஸ்வரன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார் புகைப்படத்திற்கு நன்றி tamilonline.com. இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.[1] ஓவியம் பின்னனி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்.[2]

பிறப்பும் படிப்பும்

முனீஸ்வரன் 1991 செப்டம்பர் 25 இல் சக்திவேல் -மங்களம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[3] பள்ளி படிப்பை மதுரை பி.கே.என் ஆண்கள் பள்ளியிலும், மதுரை லயோலா கல்லூரியில் ஐ.டி.ஐ எலக்ட்ரீசயன் படிப்பும் முடித்தார்.[1] பின்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

கண்காட்சி

  • ஃபியூச்சரிஸ்டிக் குழு கண்காட்சி, வின்னியஸ் பிரதமர் ஆர்ட் கேலரி, சென்னை.(2016)
  • கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை கண்காட்சி. (2016)
  • இன்டர்நேஷனல் ஆர்ட் ஷோ, வெல்கின் கேன்வாஸ், மலேசியா.(2017)
  • சிலாங்கூர் ராயல் கிளப், மலேசியா (2018)

விருதுகள்

கல்லூரியில் படிக்கும் பொழுது இவரின் ஓவியம் "கேம்லின் ஆர்ட் பவுண்டேசன்" நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றது.[1] கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி. மாநில அளவிலான தமிழக அரசு விருது, 2014 கஸ்தூரி சீனிவாசன் மெமோரியல் விருது, 2014, 2015 ரிசர்வ் வங்கி நடத்திய ஓவிய கண்காட்சியில் பங்கேற்பு.

இவரது ஓவியங்கள் தத்ரூப பாணி ஓவியங்களாக உள்ளன. அடர் நிறங்களை பயன்படுத்துதல், ஆடைகள் உள்ளிட்ட சிறு விசயங்களுக்கும் ஓவியத்தில் முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை இவரது ஓவியத்தின் தனித்தன்மைகள்.[3]

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்". www.tamilonline.com. http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11703. 
  2. [சிலைகளைப் பேசும் சித்திரங்கள் -தொகுப்பு:பிருந்தா பகுதி தூரிகைக்கவிதைகள் தி இந்து பொங்கல் மலர் 2018 பக்கம் 145 ]
  3. 3.0 3.1 https://tamil.thehindu.com/society/lifestyle/வண்ணத்துக்குள்-ஒளிந்திருக்கும்-ரகசியம்/article9598841.ece/amp/ வண்ணத்துக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!- ப்ரதிமா- 24 மார்ச் 2017

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முனீஸ்வரன்_(ஓவியர்)&oldid=7030" இருந்து மீள்விக்கப்பட்டது