முதுமொழிக்காஞ்சி, இலக்கணம்
Jump to navigation
Jump to search
முதுமொழிக் காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இந்தத் துறை புறநானூற்றில் புறத்திணையில் ஒன்றான பொதுவியல் என்னும் பகுதியில் வருகிறது.
புறநானூறு
இதில் வரும் பாடல்கள் தனி ஒருவனுக்குக் கூறும் அறிவுரைகள்.
- மக்களுக்கெல்லாம் உணவுதான் உயிர். எனவே உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். உணவு எனப்படுவது நிலத்தில் விளைவனவும் நீரும். நிலத்தில் நீர் பாய்ந்தால் விளைச்சல் பெருகும். நீர் பாய நீரை நிலத்தில் தடுத்துத் தந்தவர் புகழ் உலகில் நிலைக்கும். [2]
- புலவர் பாடிய பாட்டு உடையோர் புகழ் நிலைத்திருக்கும். எனவே வல்லவரோ, வல்லமை இல்லாதவரோ யாவராயினும் வருந்தி வந்தவருக்கெல்லாம் அருள வேண்டும். [3]
- செல்வத்தால் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் ஆற்றுக.[4]
- சுற்றத்தாரோடு சேர்ந்து இன்முகம் காட்டுங்கள். கூத்தாடுவோரைப் பார்க்க வந்த கூட்டம் போல் நீங்கும் செல்வத்தைப் பலரும் புகழும்படி பயன்படுத்துங்கள்.[5]
- வயிற்றுக்காக மானம் போக வாழவேண்டாம்.[6]
அறநூல்
- பொதுமக்களுக்குக் கூறும் அறிவுரை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி. இது வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைப் பத்துப்பத்தாக ஒருவரிப் பாடலில் அடுக்கிக் கூறுகிறது.
அடிக்குறிப்பு
- ↑ புறநானூறு 18, 27, 28, 29, 74
- ↑
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
---
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே - ↑
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் புறநானூறு 27) - ↑
அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின்செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே. (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநானூறு 28) - ↑
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே! (சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநானூறு 29) - ↑
வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே? (சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டு, புறநானூறு 74