முகம்மது சியாவுதீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முகம்மது சியாவுதீன்
இயற்பெயர் முகம்மது சியாவுதீன்
Muhammad Ziauddin
محمد ضیاء الدین
பிறந்ததிகதி 1938 (1938)
பிறந்தஇடம் சென்னை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 29 நவம்பர் 2021
(அகவை 82–83)
பணி பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாளர்
தேசியம் பாக்கித்தானியர்
கல்வி நிலையம் தாக்கா பல்கலைக்கழகம்
கராச்சி பல்கலைக்கழகம்
செயற்பட்ட ஆண்டுகள் 1964–2021
செயற்பட்ட ஆண்டுகள் 1964–2021

முகம்மது சியாவுதீன் (Muhammad Ziauddin) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியராகவும் இவர் அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

1938 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் இருந்த சென்னை நகரில் சியாவுதீன் பிறந்தார். [2] டாக்கா பல்கலைக்கழகத்தில் [3] மருந்தியலில் இளம் அறிவியல் பட்டமும், 1964 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் [1] . பாக்கித்தான் எகனாமிசுட்டு, மார்னிங் நியூசு, தி முசுலீம், டான், தி நியூசு இன்டர்நேசனல் மற்றும் தி எக்சுபிரசு திரிப்யூன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். " இவரது வாழ்க்கை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து செய்தித்தாள்களில் பரவியது", என்று ஒரு முக்கிய பாக்கித்தானிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசை கூறியது.[3] [2] [4]

2002 [1] ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு வரை தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

பாக்கித்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாக்கித்தான் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து சியாவுதீனை அடிக்கடி அழைத்து ஆலோசனை கேட்பார் என்று கூறப்படுகிறது. [4]

இறப்பு மற்றும் மரபு

29 நவம்பர் 2021 அன்று இசுலாமாபாத்தில் உள்ள இல்லத்தில் முகம்மது சியாவுதீன் காலமானார். [5] [2]

அவரது சக பத்திரிகையாளர்களில் ஒருவரான கைசர் பட், சமச்சீர் மற்றும் புறநிலை நோக்கோடு கட்டுரைகளை எழுதுவார் என்று கூறி இவருக்கு அஞ்சலி செலுத்தினார். [4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=முகம்மது_சியாவுதீன்&oldid=27659" இருந்து மீள்விக்கப்பட்டது