மீசோலைட்டு
| மீசோலைட்டுMesolite | |
|---|---|
| படிமம்:Mesolite from Bombay, Hunterian Museum, Glasgow.jpg மும்பையில் கிடைத்த மீசோலைட்டு, 18 ஆம் நூற்றாண்டில் இயான் அண்டர் சேகரித்தது | |
| பொதுவானாவை | |
| வகை | டெக்னோசிலிக்கேட்டு கனிமங்கள், சியோலைட்டு கனிமக் குழு, நேட்ரோலைட்டு துணைக்குழு |
| வேதி வாய்பாடு | Na2Ca2Si9Al6O30·8H2O |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது, வெண்மை, சாம்பல், மஞ்சள் பழுப்பு |
| படிக இயல்பு | நீளமான பட்டகப் படிகங்கள், பொதுவாக முடி போன்ற கட்டிகள் மற்றும் இழைகளின் திரட்டுகளில்; கதிர்வீச்சு கொண்ட சிறிய நிறைகள்; |
| படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
| இரட்டைப் படிகமுறல் | {010} அல்லது {100} இல் இரட்டை |
| பிளப்பு | சரிபிளவு {110} மற்றும் {110} |
| முறிவு | ஒழுங்கற்றது |
| விகுவுத் தன்மை | நொறுங்கும், கடினமான நிறைகள் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 |
| மிளிர்வு | பளபளக்கும், இழைகளாக இருக்கும்போது பட்டு போன்றது |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் முதல் ஒளிகசியும், ஒளிபுகாது |
| ஒப்படர்த்தி | 2.26 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.505 nβ = 1.505 nγ = 1.505 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.001 |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 80° |
| பிற சிறப்பியல்புகள் | சிறிய பைரோமின் விளைவை வெளிப்படுத்தும் |
| மேற்கோள்கள் | [1][2][3][4] |
மீசோலைட்டு (Mesolite) என்பது Na2Ca2Si9Al6O30*8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சியோலைட்டு கனிமக் குழுவில் நேட்ரோலைட்டு துணைக்குழு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. தோற்றத்தில் நேட்ரோலைட்டு கனிமம் போலவும் இது காணப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மீசோலைட்டு கனிமத்தை Mes[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மீசோலைட்டு கனிமம் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகிறது. பொதுவாக இழைகளாகவும், ஊசிவடிவப் பட்டகப் படிகங்களாகவும் உருவாகிறது. ஊசி போன்ற படிகங்களின் கதிர்வீச்சுத் தெளிப்புகள் அசாதாரணமானது அல்ல. ம்சோலைட்டு பளபளப்பில் கண்ணாடிபோன்றதாகும். தெளிவானது முதல் வெள்ளை நிறம் வரை காணப்படும். 5 முதல் 5.5 வரையிலான மோவின் கடினத்தன்மையையும் 2.2 முதல் 2.4 வரையிலான குறைந்த ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது. மீசோலைட்டின் ஒளிவிலகல் குறியீட்டு மதிப்புகள் nα=1.505 nβ=1.505 nγ=1.506 ஆகும்.
தோற்றம்
மீசோலைட்டு முதன்முதலில் 1816 ஆம் ஆண்டு சிசிலியின் கட்டானியாவிற்கு அருகிலுள்ள சைக்ளோபியன் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[4] கிரேக்க மொழியில் மீசோசு என்ற சொல்லுக்கு "நடுத்தரம்" என்பது பொருளாகும். மீசோலைட்டு கனிமத்தின் இயைபு நேட்ரோலைட்டு மற்றும் சுகோலிசைட்டுக்கு இடையில் இருக்கிறது.[3][4] மற்ற சியோலைட்டுகளைப் போலவே, மீசோலைட்டும் அமிக்டலாய்டல் பாசால்ட்டிலும், ஆண்டிசைட்டுகள் எனப்படும் எரிமலைப் பாறை மற்றும் நீர் வெப்ப நரம்புகளின் வெற்றிட நிரப்புதல்களாகக் காணப்படுகிறது.[2]
படங்கள்
-
மீசோலைட்டு
-
மணிவடிவச் சிதல் உறையுடைய காளான் போன்ற மீசோலைட்டின் பாசால்ட் பாறையில் நிரப்பப்படாத குழி
-
இழைவடிவ படிகங்களில் உருவாகும் மீசோலைட்டு
-
தாம்சோனைட்டிலிருந்து வளரும் மீசோலைட்டின் முடி போன்ற ஊசிவடிவப் படிகங்களின் ஒரு பை.
-
இந்தியாவின் புனே அருகே உள்ள குகைகளில் இருந்து எடுக்கப்பட்ட இழைவடிவ படிக மாதிரி.
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 Mindat.org
- ↑ 4.0 4.1 4.2 Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.