மிருணாளினி இரவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிருணாளினி இரவி
பிறப்பு10 மே 1995 ( 29 )
பாண்டிச்சேரி, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019–தற்போது வரை

மிருணாளினி இரவி (Mirnalini Ravi) என்பவர் ஒரு நடிகை ஆவார். இவர் டிக்டாக் செயலி மூலம் காணொளிகளை வெளியிட்டு பிரபலமான பின் நடிகையாக ஆனார். இவர் முக்கியமாக தென்னிந்திய படங்களில் தோன்றினார்.

தொழில்

மிருணாளினி பொறியியல் படித்து ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். தனது ஓய்வு நேரத்தில், அவர் டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களைப் பதிவேற்றினார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அந்த வீடியோக்களில் ஒன்றைப் பார்த்து, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கான ஆடிஷனுக்கு அழைத்தபோது அவரது திரை வாழ்க்கை தொடங்கியது. சுசீந்திரனின் சாம்பியனில் முன்னணி நடிகையாக நடித்தார்.[1]

இவர் 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.கடலக்கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வா வின் நாயகியாக அறிமுகம் ஆனார்.[2][3] டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் மறுஆய்வில், விமர்சகர் "மிருனாலினி தன்னிடம் இருக்கும் திரை நேரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்குகிறார்" என்று எழுதினார்.[4] மிருனாலினி ரவி கதாநாயகியாக பொன்ராம் எம்.ஜி.ஆர் மகன் ஜாங்கோ, கோப்ரா, போகரு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5][6][7][8][9]

விருதுகள் மற்றும் சாதனைகள்

2016 ஆம் ஆண்டில், மிருணாளினிக்குத் தொடக்க விருது வழங்கும் விழாவில் ஸ்மைல் செட்டாய் சிறந்த பெண் டப்ஸ்மாஷர் விருதை வழங்கினார்கள். 2017 ஆம் ஆண்டில், ஃபோகஸ் லைஃப்ஸ்டைல் பத்திரிகையின் அட்டைப்படத்தில் அதன் செப்டம்பர் இதழுக்காக அவர் இடம்பெற்றார்.[10]

திரைப்படங்கள்

  • சூப்பர் டீலக்ஸ் - சேத் பெண் (ஏலியன்)
  • கடலக்கொண்ட கணேஷ் - புஜ்ஜிமா
  • சாம்பியன் - சனா
  • எனிமி - Dr. அஷ்விதா
  • எம்.ஜி.ஆர் மகன் - அனு ப்ரியா
  • ஜாங்கோ - நிஷா கௌதம்
  • கோப்ரா - ஜெனிபர் ரொசாரியோ

குறிப்புகள்

  1. Adivi, Sashidhar (10 September 2019). "I fought with my parents for a year: Mirnalini Ravi". https://www.deccanchronicle.com/entertainment/tollywood/100919/i-fought-with-my-parents-for-a-year-mirnalini-ravi.html. 
  2. Adivi, Sashidhar (10 September 2019). "Mirnalini Ravi in Valmiki". https://www.deccanchronicle.com/entertainment/tollywood/010419/mirnalini-ravi-in-valmiki.html. 
  3. Chowdary, Y Sunita (1 April 2019). "Mirnalini Ravi to debut in Telugu cinema with 'Valmiki'". https://www.thehindu.com/entertainment/movies/mirnalini-ravi-to-debut-in-telugu-cinema-with-valmiki/article29390847.ece. 
  4. "Valmiki Review {3.5/5}: Harish Shankar and Varun Tej make 'Gaddalakonda Ganesh' their own". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/valmiki/movie-review/71215849.cms. 
  5. "Mirnalini Ravi to be directed by Ponram of Varuthapadatha Valibar Sangam". 24 September 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mrinalini-ravi-to-be-directed-by-ponram-of-varuthapadatha-valibar-sangam/articleshow/71275547.cms. 
  6. Menon, Thinkal (25 September 2019). "Sasikumar's MGR Magan has Mirnalini as the heroine". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sasikumars-mgr-magan-has-mirnalini-as-the-heroine/articleshow/71277388.cms. 
  7. "Teaser of CV Kumar's 'Jango' to released soon!". 1 February 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/teaser-of-cv-kumars-jango-to-released-soon/articleshow/73835393.cms. 
  8. "Mirnalini Ravi in Vikram's Cobra". 2 January 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mirnalini-ravi-in-vikrams-cobra/articleshow/73069628.cms. 
  9. "'Pogaru' to release on April 24?". 5 March 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/pogaru-to-release-on-april-24/articleshow/74487583.cms. 
  10. "Mirnalini Ravi Bio, Age, Wiki, Height, Family, Movies, Facts" (in en-US). 2018-02-26. https://celebsline.com/mirnalini-ravi/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மிருணாளினி_இரவி&oldid=23190" இருந்து மீள்விக்கப்பட்டது