மிரிஸ்ஸ
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மிரிஸ்ஸ (ஆங்கிலம்: Mirissa; சிங்களம்: මිරිස්ස) இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரம் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில், கொழும்புக்கு தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4 மீட்டர் (13 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மிரிஸ்ஸ கடற்கரை பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மீன்பிடி துறைமுகமான இந்நகரம் திமிங்கலங்கள் மற்றும் ஓங்கில்களை பார்வையிடும் இடங்களில் ஒன்றாகும்.
மிரிஸ்ஸ මිරිස්ස | |
---|---|
மிரிஸ்ஸ கடற்கரை | |
ஆள்கூறுகள்: 5°56′45″N 80°27′35″E / 5.94583°N 80.45972°ECoordinates: 5°56′45″N 80°27′35″E / 5.94583°N 80.45972°E | |
Country | இலங்கை |
Province | தென் மாகாணம், இலங்கை |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 4,695[1] |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
வரலாறு
மிரிஸ்ஸ இலங்கையின் தென் கரையோரத்தின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாகும். இங்கு 1980 ஆம் ஆண்டில் முதன் முதலில் சுற்றுலா விடுதி கட்டப்பட்டதாயினும் 1990 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் சுற்றுலாத்துறை வியத்தகு அளவில் அதிகரித்தது.[2]
2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் ஏற்பட்ட ஆழிப் பேரலையினால் மிரிஸ்ஸ நகரம் பாதிப்புக்குள்ளாகியது. ஏராளமான வீடுகள், விருந்தினர் மாளிகைகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் சேதமாகின. பதினான்கு பேர் உயிரிழந்தனர்.
போக்குவரத்து
மிரிஸ்ஸ நகரம் தென் கரையோரத்தில் இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-மாத்தறை பாதையில் அமைந்துள்ளது.
கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் ஏ2 நெடுஞ்சாலை வழியாகவும் இந்நகரை அடையலாம்.[2]
சுற்றுலாத் தலங்கள்
- மிரிஸ்ஸ கடற்கரை[3]
- திமிங்கலங்களை அவதானிக்கும் இடம்
- ஸ்ரீ சுனந்தராம கோயில்
காண்க
குறிப்புகள்
- ↑ Brinkhoff, Thomas (13 October 2012). "Ella (Divisional Secretariat)". City Population. http://www.citypopulation.de/php/srilanka-admin.php?adm2id=8136. பார்த்த நாள்: 2 July 2014.
- ↑ 2.0 2.1 "Rebuilding Mirissa: After the deluge" (in en). 2005-02-10. http://www.independent.co.uk/arts-entertainment/rebuilding-mirissa-after-the-deluge-1529808.html.
- ↑ Weragala, Hasintha (2018-07-21). "Mirissa beach" (in en-US). https://www.thingstodosrilanka.com/top-5-things-to-do-in-mirissa-sri-lanka/.