மாதம்பட்டி ரங்கராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) என்பவர் இந்திய சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்கிறது.[1][2] இவர் மெஹந்தி சர்க்கஸ் (2019) மூலம் நடிகராக அறிமுகமானார், பின்னர் த்ரில்லர் திரைப்படமான பென்குயின் (2020) திரைப்படத்தில் நடித்தார்.

தொழில்

சமையல் தொழில்

ரங்கராஜின் ஆர்வம் அசைவூட்ட துறையில் இருந்ததால் வேலைக்காக உணவுத் துறையில் ஈடுபடுவதற்கு முன்பு பொறியியல் கல்வி பயின்றார்.[2] 2002ஆம் ஆண்டில், இவர் தனது சகோதரருடன் சேர்ந்து தனது குடும்பத்தின் வணிகத்தில் ஈடுபட்டார்.[3] ரங்கராஜ் பெங்களூருக்குச் சென்று உணவகம் ஒன்றைத் தொடங்கினார்.[2] மாதம்பட்டிக்குத் திரும்பியதும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் சமையல் பொறுப்பினைக் கவனித்துக்கொண்டார்.[2] ரங்கராஜ் திரைப்படக் குழுவினருடன் பணிபுரிந்து, அவர்களுக்குத் தேவையான உணவினைப் படப்பிடிப்பு தளத்தில் வழங்கி வந்தார்.[2] இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தின் மூலம் நடிகர் கார்த்தியின் திருமணம் உட்படப் பிரபலமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் உணவுச் சேவையினை வழங்கியுள்ளார்.[2][3][4][5] மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் 2013-ல் நடைபெற்ற கோயம்புத்தூர் பேரோட்ட நிகழ்ச்சியின் உணவு ஏற்பாட்டினையும் கவனித்துக்கொண்டது.[2][6][7] ரங்கராஜ் சமையலில் கொய்யா சட்னி என்பது பெருமைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.[8]

நடிகராக

மெஹந்தி சர்க்கஸ் (2019) என்ற காதல் நாடகத்தின் மூலம் ரங்கராஜ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[3][9][10] தி டெக்கான் குரோனிக்கிள் வழங்கிய இந்த படத்தின் திரை விமர்சனத்தில், "பிரபல சமையல்காரராக இருந்து கதாநாயகனாக மாறிய மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மைக் கதாநாயகனாகப் பொருத்தமாக நடித்துள்ளார்" என்று தெரிவித்தது.[11] இவரது அடுத்த தமிழ் திகில் படம், பெங்குயின் (2020) ஆகும். இதன் இயக்குநர் ஈசுவர் கார்த்திக் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தினைப் பார்த்த பிறகு ரங்கராஜீக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார்.[1] ரங்கராஜ் பின்னர் நவம்பர் 2020-ல் மார்க் ஜோயலின் கேசினோவில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.[12]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு
2019 மெஹந்தி சர்க்கஸ் ஜீவா [3]
2020 பென்குயின் கௌதம் சித்தார்த் [13]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Karthi, E. Sudharshan. "``ஏழே கேரக்டர்ஸ்... கொடைக்கானலில் 32 நாள்... பென்ச்மார்க் கீர்த்தி! - `பெண்குயின்' அப்டேட்ஸ்" [`` Seven Characters ... 32 Days in Kodaikanal ... Benchmark Keerthi! - `Penguin 'Updates]. Ananda Vikatan. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Rao, Subha J. (20 March 2014). "Madhampatty virundhu". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  3. 3.0 3.1 3.2 3.3 Jeshi, K. (13 May 2019). "Shweta Tripathi taught me method acting: Madhampatty Rangaraj on 'Mehandi Circus'". தி இந்து. Archived from the original on 26 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  4. Karthi, E. Sudharshan. ""கார்த்தி கல்யாணத்துக்கு கேட்டரிங், சூர்யா அண்ணனின் வாழ்த்து!" – 'மெஹந்தி சர்க்கஸ்' ரங்கராஜ்" ["Catering to Karthi wedding, brother Surya's greeting!" – 'Mehandi Circus' Rangaraj]. Ananda Vikatan. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  5. Rao, Subha J (3 July 2011). "A wedding to remember". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  6. "Over 15,000 likely to take part in Coimbatore Marathon". தி இந்து. 2 October 2018. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  7. "Honoured". தி இந்து. 3 November 2018. Archived from the original on 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  8. Rajkumar, Shanthini (17 July 2018). "'Cos now I'm living on green power: An ode to the green guava". தி இந்து. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  9. "Music to our ears". தி இந்து. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 28 June 2020 – via PressReader.
  10. Rao, Subha (20 April 2019). "From Catering To Cinema: How Madhampatty Rangaraj Stirred His Way Into Tinseltown". Film Companion. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  11. Subramanian, Anupama (20 April 2019). "Mehandi Circus movie review: A breezy romantic entertainer". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 27 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  12. "Vani Bhojan begins shooting for Casino; shares photos from puja ceremony". Zoom. 26 November 2020 இம் மூலத்தில் இருந்து 8 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210608010847/https://www.zoomtventertainment.com/amp/tamil-cinema/article/vani-bhojan-begins-shooting-for-casino-shares-photos-from-puja-ceremony/687050. 
  13. "Keerthy Suresh completes 'Penguin'". Sify. 5 November 2019. Archived from the original on 22 December 2019. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாதம்பட்டி_ரங்கராஜ்&oldid=22017" இருந்து மீள்விக்கப்பட்டது