மாகுரி
மாகுரி (Mahuri) என்பது இந்திய நாட்டில் இந்துமதத்தைப் பின்பற்றுவோரில் காணப்படும் ஒரு வகை சாதி பிரிவு ஆகும். மாகுரி சாதியைச் சேர்ந்த சமூகத்தினர் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். மேலும் வங்காளம், பீகார் மற்றும் ஒடிசாவிலும் சில பகுதிகளில் காணப்படுகின்றனர்.[1][2] முகலாயப் பேரரசின் கீழ், மாகுரிகள் மதுரா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து அப்போதைய வங்காள சுபாவிற்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பக்தியுள்ள சமூகமாக, மாகுரி வைசிய சமூகம் இன்றும் சக்திதேவியின் அவதாரமான மாதா மதுராசினி தேவியை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறது. சோடி மாகுரி எனப்படும் இரண்டு காற்று வாத்தியக் கருவிகள், மங்கல வாத்யத்தின் ஒரு பகுதியாக திருமணங்களின் போது இச்சமூகத்தினரால் இசைக்கப்படுகின்றன. [3][4][5] பிறந்தநாள், பூணூல் அணியும் விழா போன்ற ஒவ்வொரு மங்கல நிகழ்விலும், இக்கருவி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்ந்தது.
ஒடிசாவின் பெர்காம்பூரில் உள்ள மாகுரி நில உடைமையின் அரச வம்சத்தினர், மாகுரி மகோத்சவத்தின் போது ஒரு சடங்கைச் செய்ய ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு வருகிறார்கள்.[6] இவர்களின் முன்னோர்கள் 1803ஆம் ஆண்டில் காசுபா தெருவில் செகந்நாத் கோயிலைக் கட்டினார்கள். 2018ஆம் ஆண்டில், அப்போதைய மாகுரி நில உடைமையின் மன்னரான சிசிர் குமார் தேவின் மகன் அசோக் குமார் நரேந்திர தேவ், பக்தர்களால் இழுக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, சூலை மாதம் தேரைத் துடைக்கும் சடங்கைச் செய்தார். [7]
மேற்கோள்கள்
- ↑ "कोडरमा में 9 जुलाई को माहुरी समाज कराएगा सामूहिक विवाह,रिसेप्शन की भी व्यवस्था" (in hi-IN). News18 हिंदी இம் மூலத்தில் இருந்து 2024-06-15 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20240615021310/https://hindi.news18.com/news/jharkhand/koderma-mass-marriage-will-be-organized-by-mahuri-samaj-on-9th-july-8408243.html.
- ↑ "नालंदा: माहुरी समाज को बरगलाने वाले हो जाएं होशियार". www.livehindustan.com (in இந்தி). 2018-12-17. Retrieved 2026-03-11.
- ↑ Network, Post News (2018-08-07). "'Jodi Mahuri' may fall silent in the nursery of music - OrissaPOST". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-03-11.
- ↑ Himanshu (2025-09-29). "Sulha Bharani being played with Dhol, Nishan, Tasha and Mahuri during Maa Samaleshwari's Dussehra puja in Balangir, watch". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-03-11.
- ↑ "Jeypore celebrates Dussehra with traditional tribal music". The Times of India. 2025-09-29. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/jeypore-celebrates-dussehra-with-traditional-tribal-music/articleshow/124217922.cms.
- ↑ Patnaik, Sunil Mohan (2024-12-10). "'Mahuri Mahotsav' revives dying folk art forms of Ganjam". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2026-03-11.
- ↑ Patnaik, Sunil (15 July 2018). "Royal scions perform Lord's ritual". The Telegraph. Retrieved 11 March 2026.