மலரன்னை
மலரன்னை ஓர் ஈழத்து எழுத்தாளர். மூத்த புகழ் பெற்ற எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். இவரது இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. " கனவுகள் நனவாகும் " என்ற தொடர்நாடகம் (நாற்பத்தி மூன்று அங்கங்கள் ) ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.பல வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இவரது நாற்பதிற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் பல்வேறுபோட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. நான்கு முறை சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். "பாலைவனத்துப்புஸ்பங்கள்" என்ற நாவல் தேசிய கலாச்சாரப்பேரவை யின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது . இலக்கிய விவரணம் எழுதுவதிற்கான பிரிவு போட்டியிலும் முதற்பரிசு பெற்றிருக்கிறார். ஓவியம், ஒளிப்படம் முதலியவற்றிலும் ஈடுபாடு உடைய இவர் தையல்கலையில் சிறந்து விளங்கினார். இவரது சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும் , சில கவிதைகளும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இலக்கியப்பங்களிப்புக்காக கலைமாமணி, கலைஞானச்சுடர் விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது மகன் மலரவனும் ஓர் எழுத்தாளர் என்பதும் இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதும் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்காக அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது வெளிவந்த நூல்கள்
1,வேர்பதிக்கும் விழுதுகள் ( 16 சிறுகதைகளின் தொகுப்பு) -2015
2, கீறல் ( 23 சிறுகதைகளின் தொகுப்பு) -2016
3, மறையாத சூரியன் (நாவல்) -2016 - முத்துமீரான் விருது (2017)
4, மௌனத்தின் சிறகுகள் (நாவல்) -2017
5, அனலிடைப்புழு ( 25 சிறுகதைகளின் தொகுப்பு) -2017
6, மலைச்சாரலின் தூவல் (நாவல்)- 2018
7, காகிதப்படகு (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு) - 2018
8,அப்பாவின் தேட்டம் (25 சிறுகதைகளின் தொகுப்பு) -2019
9, பாலைவனத்துப்புஸ்பங்கள் ( நாவல்)- 2019
10, உயிர் சுமந்த கூடு ( 18 சிறுகதைகளின் தொகுப்பு) -2020
11 , அசை (21 சிறுகதைகளின் தொகுப்பு) - 2021
12 , ஒரு பிடி சாம்பல் (16 சிறுகதைகளின் தொகுப்பு) - 2021