மயில் ராவணன் (1935 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மயில் ராவணன் | |
---|---|
இயக்கம் | வி. சாந்தாராம் |
தயாரிப்பு | பிரபாத் பிலிம் கம்பெனி |
நடிப்பு | சேஷாந்திரி, ராஜீவி, சுந்தர்ராஜன், டி. டி. கனகம், பி. எஸ். ஸ்ரீநிவாசன், எஸ். பங்கஜம், கே. நடராஜன். |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மயில் ராவணன் அல்லது சந்திரசேனா ராவணன் 1935ஆம் ஆண்டு வெளிவந்த 15,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபாத் பிலிம் கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், சேஷாந்திரி, ராஜீவி, சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வி. சாந்தாராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கே. ராகவன் வசனமும், கே. தைபர் ஒளியமைப்பும், எஸ். பதேலால் என்பவர் கலைப்பணியையும் கவனித்துள்ளனர். மேலும், டி. டி. கனகம், பி. எஸ். ஸ்ரீநிவாசன், எஸ். பங்கஜம், கே. நடராஜன் முதலியோரும் நடித்துள்ள இத்திரைப்படத்தில், பாபநாசம் சிவன், எ. என். கல்யாண சுந்தரம், அருணாசல கவி போன்றோர்கள் பாடல்களை படைத்துள்ளனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "1935இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) இம் மூலத்தில் இருந்து 2018-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181207140204/http://www.lakshmansruthi.com/cineprofiles/1935-cinedetails7.asp. பார்த்த நாள்: 2016-10-15.