ஆள்கூறுகள்: 20°15′04″N 74°26′20″E / 20.251°N 74.439°E / 20.251; 74.439

மன்மாட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மன்மாட்

मनमाड

நகரம்
மன்மாட் தொடருந்து நிலையம்
மன்மாட் is located in மகாராட்டிரம்
மன்மாட்
மன்மாட்
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் மன்மாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°15′04″N 74°26′20″E / 20.251°N 74.439°E / 20.251; 74.439
நாடு India
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக் மாவட்டம்
ஏற்றம்
580 m (1,900 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்80,058
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
423104
தொலைபேசி குறியீடு02591
வாகனப் பதிவுMH 15, MH 41

மன்மாட் (Manmad) (pronunciation இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மாட் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மன்மாட் நகரம், மாவட்டத் தலைமையிடமான நாசிக்கிற்கு வடகிழக்கே 87.8 கிலோமீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் மும்பைக்கு வடகிழக்கே 252.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 580 மீட்டர் (1902 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மன்மாட் நகரத்தில் இந்திய உணவுக் கழகத்தின் பெரிய அளவிலான தானியக் கிட்டங்கிகள் உள்ளது.[2]மேலும் பாரத பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளது. இந்நகரத்தில் சீக்கியர்களின் குருத்துவார் அமைந்துள்ளது.[3] மத்திய ரயில்வேயின் பனிமனை மன்மாட் நகரத்தில் உள்ளது.[4][5] பாரத பெட்ரோலியம் நிறுவனம் மன்மாட் நகரத்தில் பெட்ரோலியப் பொருட்களை இருப்பில் வைத்து கொள்வதற்கு, நிலத்தடி சேமிப்பு கிட்டங்கி வசதிகள் கொண்டுள்ளது.

போக்குவரத்து

மன்மாட் தொடருந்து நிலையம்

மும்பை, பூசாவல், தௌந்து, புனே, ஐதராபாத், திருப்பதி, பெங்களூர், கொங்கண் பகுதிகளை இணைக்கும் இருப்புப் பாதையில் மன்மாட் சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது.[6].

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 வார்டுகள் மற்றும் 16,077 குடியிருப்புகள் கொண்ட மன்மாட் நகரத்தின் மக்கள் தொகை 80,058 ஆகும். அதில் 40,816 ஆண்கள் மற்றும் 39,242 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.8% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 21,331 மற்றும் 4,022 ஆக உள்ளனர். இந்து சமயத்தினர் 65.42%, இசுலாமியர் 20.05%, சமணர்கள் 2.56%, பௌத்தர்கள் 8.38%, கிறித்தவர்கள் 2.91%, சீக்கியர்கள் 0.42% மற்றும் பிற சமயத்தினர் 0.27% வீதம் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 14 April 2021.
  2. "FSI storage".
  3. "Gurudwara (Manmad)". www.langarsahib.org. Archived from the original on 4 Jul 2008.
  4. Inside the machine shop at Manmad Works, India, 1927 பரணிடப்பட்டது 2013-02-03 at Archive.today
  5. Central Railway Bhusawal Administration
  6. MANMAD JN MMR Railway Station Trains Schedule
  7. Manmad Population, Religion, Caste, Working Data Nashik, Maharashtra - Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=மன்மாட்&oldid=460112" இலிருந்து மீள்விக்கப்பட்டது