மதுரைப் பூதன் இளநாகனார்
Jump to navigation
Jump to search
மதுரைப் பூதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 276.
பூதன் என்பது இளநாகனாரின் தந்தை பெயர்.
பாடல் சொல்லும் செய்தி
- திணை - தும்பை
- துறை - தானைமறம்
போர்வீரன் ஒருவன் போரிட்ட திறத்தை இந்தப் பாடல் விளக்குகிறது.
செம்முது பெண்டாகிய ஆய்ச்சி ஒருத்தி கறந்த பாலைக் காய்ச்சி விரலால் தெறித்த துளிப் பிறைமோர் எப்படிக் குடத்துப் பாலையெல்லாம் திரியச் செய்யுமோ அதுபோல இந்த ஒரே ஒரு மறவனால் தாக்கப்பட்டுப் பகைவரெல்லாம் கலங்கிப் போயினராம்.