மதுரைக் கொல்லன் புல்லன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரைக் கொல்லன் புல்லன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரத் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 373. (கொல்லன் = பொன் வினைஞன், இரும்பு வினைஞன்)

பாடல் சொல்லும் செய்தி

ஊகம் "நீடுமயிர்க் கடும் பல் ஊகம் கறை விரல் ஏற்றை"

நிலம் கீழே, நீர் மேலே என்று பிறழ்ந்தாலும், பெருங்கடலுக்கு எல்லை தட்டுப்பட்டாலும் நீ கலங்காதே. அவர் ஊரார் பழிக்கும் கௌவையை விட்டுவைக்க மாட்டார். இவ்வாறு சொல்லிக் கௌவைக்கு அஞ்சும் தலைவியைத் தோழி ஆற்றுவிக்கிறாள்.

நாடனொடு நட்பு

'ஆண்ஊகம் தன் கறைபட்ட விரல்களால் பலாப்பழத்தைத் தோண்டி உண்ணும் நாடன் உன் காதலன்' என்கிறாள். (ஊகம் = கரடி)

"https://tamilar.wiki/index.php?title=மதுரைக்_கொல்லன்_புல்லன்&oldid=12645" இருந்து மீள்விக்கப்பட்டது