மதுரை வரலாறு
மதுரை தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று.[1][2] இது மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும், புகழ்வாய்ந்த சைவத் தலமாகவும் உள்ளது.
சங்க காலம்
மதுரை உலகின் பழமையான தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துவரும் நகரங்களில் ஒன்று. [3] இந்நகரம் கி.மு முதல் புத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையான நகரமாகவும், பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. மதுரை 2 வது நூற்றாண்டின் தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய இரு நூல்களும் இந்த நகரம் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை குறித்து விரிவான விளக்கத்தை கொடுக்கிறன.
உரோம வரலாற்றாசிரியர்களான இளைய பிளினி மற்றும் தொலெமி ஆகியோரின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது [4] மற்றும் கிரேக்க புவியியலாளர் இசுட்ராபோ குறிப்பிட்டுள்ளார் மேலும் செங்கடல் செலவு நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]
ஆங்கிலேயர் காலம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மதுரை ஆங்கிலேயரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் 1764ல் போனது. அப்போது முதல் மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் ப்ரக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார் என்ற குறிப்புள்ளது. 1801ல் ஆங்கிலேயரின் முழுமையான ஆட்சிக்கு உட்பட்டதாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1866 இல் மதுரை நகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்கூட ஆங்கியேர்களே மாவட்ட ஆட்சியராக இருந்து வைந்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர் 1834 முதல் 1847 வரை மதுரை ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்கன் என்பவர். 13 ஆண்டுகள் மதுரை ஆட்சியராக இருந்த பிளாக்பர்ன் எடுத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் புகழ்ந்தும் உள்ளனர் பிளாக்பர்ன் பொறுப்புக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றி இருந்த வீதிகள், ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசிவீதி என்ற நான்கு பிரதான வீதிகளில் கோயிலின் உள்ளே இருந்த ஆடிவீதி தவிர மற்ற மூன்று வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அந்தக்காலத்திலேயே இருந்தது. இதனை பிளாக் பர்ன் அகற்றியுள்ளார். மதுரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிள்ளையார் சுழியை போட்டவர் இவரே. இதனைத்தொடர்ந்து பிளாக் பர்ன் மதுரையை விரிவு படுத்த பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அவருக்கு மதுரையில் இருந்த கோட்டைகளும், அகழிகளும் தடையாய் இருந்தது. மதுரையை சீரமைக்கவேண்டும் எனில் அகழிகளை அழிப்பதை தவிர வேறு வழியில்லை என நினைத்தார் ஆட்சியர். ஒவ்வொரு அகழிகளின் நீளம் 5670 அடியாக இருந்துள்ளது. அகழிகளை அகற்றுவதற்கு பெரும் மனித உழைப்பும், பணம் விரயமாகும் என எண்ணி அதற்காக ஒரு யுக்தியை கையாண்டார். அகழியை யார் சொந்த செலவில் மூடுகிறார்களோ அவர்களது அந்த இடத்தை தனதாக்கி கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டார். இதனால் ஆர்வம் கொண்ட மக்கள் அகழிகளை மூடினார்கள். அகழிகளை மூடி இடத்தை வைத்துக்கொண்டார்கள். வெளிவீதி கோட்டைச்சுவர்கள் இடிக்கப்பட்டு அகழி வீதிகள் உருவாக்கப்பட்டன. கோட்டைக்கு வெளியே உள்ள வீதி வெளிவீதி என்றும், மேற்கு பக்கம் இருந்த வீதி மேலவெளிவீதி என்றும், வடக்கு பக்கம் இருந்த வீதி வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி என உருவாகியது. நினைவு சின்னங்கள் அழித்த வழக்கு பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்ட்டன. மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி, வடக்குபெருமாள்மேஸ்திரி வீதி, கீழப்பெருமாள்மேஸ்திரி வீதி என உருவாக்கப்பட்டது. விளக்குத்தூண் பிளாக்பர்னின் மதுரை சீர்திருத்தத்திற்காக அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களை நிறுவினார்கள். ஒன்று கீழமாசிவீதி, தெற்குமாசிவீதி சந்திப்பில் உள்ள விளக்குத்தூண். இவ்விளக்குத்தூணில் பிளாக்பர்ன் விளக்குத்தூண் என்றும் ~~பை எ கிரேட்புல் பிய+ப்பிள்~~ என்று ஆங்கிலத்தில் ;அதாவது நன்றியுள்ள மக்களால் நிறுவப்பட்ட தூண் என்ற குறிப்பு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சிதைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் மேடாகி மறைந்து உள்ளதாக கூறுகிறார்கள். வரலாற்று சின்னங்களை அழித்தவருக்கு பாராட்டு 1847 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று சென்றபோது இங்கிலாந்தில் நடந்த பாராட்டு விழாவில் எபிசியண்ட் கலெக்டர் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. வரலாற்று தவற்றுக்கு வால்பிடித்தவர்களை காலமும் வரலாறும் மண்ணிக்கவே மன்னிக்காது என்பதை வரலாறுகள் மீண்டும் மீண்டும் போதித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தான் காதுகொடுத்து கேட்பதில்லை.
மேற்கோள்கள்
- ↑ "Tamil Nādu - City Population - Cities, Towns & Provinces - Statistics & Map". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
- ↑ "Largest Urban areas". CityMayor.de.
- ↑ "Madurai Districts". Dinamalar.
- ↑ "Ptolemy (2nd century ce), commenting on the brisk trading relations between ‘Modura’, the Greeks and the Romans, calls it ‘the Mediterranean emporium of the south’" Madurai (2002). In Dictionary of Hindu Lore and Legend, Thames & Hudson.
- ↑ Reynolds, Holly Baker (1987). The City as a sacred center: essays on six Asian contexts - Madurai: Koyil Nagar. BRILL. pp. 12–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-08471-1.
- தமிழ்வாசல்,எம்.வீ.அடைக்கல்ராஜ்-மதுரை