மண்ணடி, சென்னை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மண்ணடி, சென்னை
மண்ணடி
புறநகர்ப் பகுதி
மண்ணடி, சென்னை is located in தமிழ் நாடு
மண்ணடி, சென்னை
மண்ணடி, சென்னை
மண்ணடி (சென்னை)
ஆள்கூறுகள்: 13°05′37.7″N 80°17′20.8″E / 13.093806°N 80.289111°E / 13.093806; 80.289111Coordinates: 13°05′37.7″N 80°17′20.8″E / 13.093806°N 80.289111°E / 13.093806; 80.289111
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 001
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதுறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்தயாநிதி மாறன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்பி.கே. சேகர் பாபு
இணையதளம்https://chennaicorporation.gov.in

மண்ணடி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்திலுள்ள புறநகர்ப் பகுதியாகும். வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகமான நெருக்கத்துடன் இங்கு அமைந்துள்ளன. .[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மண்ணடி நகரின் புவியியல் ஆள்கூறுகள் 13°05'37.7"N 80°17'20.8"E (அதாவது, 13.093800°N 80.289100°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார் பேட்டை ஆகியவை இந்நகரின் அருகிலுள்ள ஊர்களாகும்.

போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து

இராஜாஜி சாலை, பிரகாசம் சாலை (பிராட்வே), நேதாஜி சுபாஷ் சந்திர (NSC) போஸ் சாலை வழியாக இயக்கப்படும் சென்னை மாநகரப் பேருந்துகள் ஏராளம். இவற்றினால் மண்ணடி வந்து செல்வோரின் பயணங்கள் எளிதாக இருக்கின்றன.

தொடருந்து போக்குவரத்து

சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம் வழியாகப் பயணிப்பவர்கள் மண்ணடி வந்து செல்வது சுலபம்.

மெற்றோ வழித்தடம்

சென்னை மெற்றோவின் நீல, சுரங்கப்பாதை வழித்தடம் மண்ணடி வழியாகச் செல்வதுடன், மண்ணடி மெட்ரோ நிலையம் மண்ணடியில் அமைந்து, இங்குள்ள மக்களின் பயன்பாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம்

'சென்னை நேஷனல் மருத்துவமனை' என்ற பெயரில் ஜாஃபர் சரங் தெருவில், பல்நோக்கு மருத்துவமனை ஒன்று உள்ளது.[2]

ஆன்மீகம்

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் மகாகவி பாரதியார் வழிபட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற கோயிலான காளிகாம்பாள் கோவில்,[3] மற்றும் பாரம்பரிய எழில்மிகு கட்டிடங்களில் ஒன்று என 'சிஎம்டிஏ' (CMDA) அமைப்பால் அறிவிக்கப்பட்ட கச்சாலீசுவரர் கோவில், ஜார்ஜ் டவுன், சென்னை,[4] ஆகியன மண்ணடியில் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மண்ணடி,_சென்னை&oldid=40772" இருந்து மீள்விக்கப்பட்டது