மணி நாகப்பா
இயற்பெயர் | மணி நாகப்பா |
---|---|
பணி | சிற்பி, திரைப்பட நடன இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் |
அறியப்படுவது | அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நபர்களின் சிலைகளை வடித்தல் |
பிள்ளைகள் | சித்ரா அமிர்தராஜ் |
மணி நாகப்பா (Mani Nagappa, பிறப்பு 1925) ஒரு சிற்பியாவார். இவர் 600க்கும் மேற்பட்ட சிலைகளைச் செய்துள்ளார்.[1]
வாழ்க்கை
இவர் பிறந்த ஊர் சென்னையாகும். தந்தை பெயர் ராவ் பகதூர் எம்.எஸ்.நாகப்பா. தாயார் பெயர் ஜகதாம்பாள். படித்தது சென்னையில். பள்ளி நாடகத்தில் நன்றாக நடித்ததை பார்த்த ரஞ்சன் பாராட்டி, நடனம் கற்றுத்தந்தார். அவருடன் 5 ஆண்டுகள் இருந்து பரதநாட்டியம், கதகளி போன்றவற்றை கற்றுக்கொண்டார். ரஞ்சனுக்கு டூப்பாகப் பல நாடகங்களில் நடித்தார். பல்வேறு தலைவர்களின் சிலையை வடித்திருப்பதால் பெரும் தலைவர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர். பண்டாரநாயக சுட்டுக் கொல்லப்பட்டபோது அருகில் இருந்தார்.
பணிகள்
மோட்டார் பொறியியலில் ஈடுபாடு காரணமாகத் தனது 18 வயதில் 6 குதிரை திறன் கொண்ட மூன்று சக்கர காரை வடிவமைத்து ஓட்டினார். உரிமம், எண் பலகை இல்லாததால் வெள்ளைக்கார காவலர்களால் பிடிக்கப்பட்டார். புதிய கண்டுபிடிப்பைச் செய்யக்கூட சுதந்திரம் இல்லை என்பதால் சேர்ந்தார். ஐ.என்.ஏ.வில் சேர்ந்தார்
வடித்த சிலைகள்
ஜவகர்லால் நேரு, சிவாஜி கணேசன், உ.முத்துராமலிங்க தேவர், ஆர். வெங்கட்ராமன்,[2]லண்டனில் உள்ள காந்தி சிலை, இலங்கையில் உள்ள தங்கத்தாலான புத்தர்சிலை. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை செய்தார்.[3]
குறிப்புகள்
- ↑ Ahmed, Omair (July 7, 2008). "Bronze Age Booming". The Outlook 48 (27): 92.
- ↑ http://www.deccanherald.com/content/18255/i-never-thought-would-live.htm
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்105