மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948
Mahatma: Life of Gandhi, 1869–1948
இயக்கம்வித்தல்பாய் ஜவேரி
தயாரிப்புகாந்தி தேசிய நினைவு நிதி
இந்திய திரைப்படப் பிரிவு
கதைவித்தல்பாய் ஜவேரி
ஓட்டம்330 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்

மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 (Mahatma: Life of Gandhi, 1869–1948 [1]) என்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 1968 ஆண்டைய விபரணப்படமாகும். இந்தப் படமானது இந்திய அரசின் திரைப்படப் பிரிவின் ஒத்துழைப்போடு, காந்தி தேசிய நினைவு நிதியில் தயாரிக்கப்படது. இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியவர் வித்தல்பாய் ஜவேரி ஆவார்.[2] மேலும் இப்படத்தில் இடம்பெற்ற வர்ணனையானது ஜவேரியால் செய்யப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்படமானது, 33 சுருள்களோடு (14 அத்தியாயங்கள்), 330 நிமிட கால அளவைக் கொண்டுள்ளது.

இப்படமானது காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும், சத்தியத்திற்கான அவரது இடைவிடாத தேடலைக் காட்டும் விதமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இயங்குபடம், அசல் ஒளிப்படங்கள், பழைய அச்சுப் பிரதிகள் போன்றவற்றை உள்ளடக்கி காந்தியின் வாழ்க்கையைக் காட்டுகிறது.   இந்த கதையானது பெரும்பாலும் காந்தியின் சொந்த சொற்களைப் பயன்படுத்தி விவரிக்கப்பட்டுள்ளது.

இப்படமானது பல பதிப்புகளைக் கொண்டதாக உள்ளது. ஆங்கிலத்தில் 5 மணிநேரம் கொண்ட விரிவான பதிப்பும், 2 மணி 16 நிமிடங்கள் கொண்ட இடைநிலைப் பதிப்பும், ஒரு மணிநேரம் கொண்ட சிறு பதிப்புகளாகவும் உள்ளது. இதன் இந்தி பதிப்பானது 2 மணி 20 நிமிடங்களிலும், ஜேர்மன் பதிப்பானது1 மணி 44 நிமிடங்களுடன் உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Mahatma: Life of Gandhi, 1869–1948 (1968 - 5hrs 10min)". https://www.youtube.com/watch?v=rfHUvW7L5-k#t=5h6m10s. பார்த்த நாள்: 30 December 2014. 
  2. "Vithalbhai Jhaveri" இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226081124/http://gandhiserve.org/information/our_photographers/vithalbhai_jhaveri.html. பார்த்த நாள்: 30 December 2014. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி