மகரந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகரந்தன் (பி.1966) புதுச்சேரிக்காரர். இவரை வல்லினம் மகரந்தன் என்றும் அழைக்கின்றனர். 1990களில் ‘மண்குதிரை’ என்கிற கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து சிறுகதை, நாடகம் என தனது இலக்கியப் புலத்தை விரிவுபடுத்திக் கொண்டவர். 2002இல் ‘வல்லினம்’ என்கிற பெயரில் காலாண்டிதழ் ஒன்றினைத் தொடங்கி அதன்மூலம், விளிம்புநிலை ஆய்வுகள், சமூக அறிவியல் கருத்தாடல்கள் ஆகியற்றை விரிவுபடுத்தி வருபவர். இதன் நீட்சியாக மாற்று வரலாற்றுக்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார். இந்திய அரசின் இலக்கியப் பேரவையாகத் திகழக்கூடிய ‘சாகித்திய அகாதெமி’யின் பொதுக்குழு உறுப்பினராகவும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக(2008-2012)இருந்துள்ளார்.

"https://tamilar.wiki/index.php?title=மகரந்தன்&oldid=5249" இருந்து மீள்விக்கப்பட்டது