மகட்பாற்காஞ்சி
தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் காணப்படும் பொருள் அகத்திணை என்றும், புறத்திணை என்றும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அகத்திணை மனத்திற்குத் தெரியும் ஆண்-பெண் உறவு பற்றியது. மறைவின்றி ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் புறத்திணை.
தொல்காப்பியம் புறத்திணையில் ஏழு பகுப்புகளை வைத்துள்ளது. அவற்றில் ஒன்று காஞ்சித்திணை. நிலையில்லாத உலகில் நிகழ்வனவற்றைக் கூறுவது காஞ்சித்திணை [1]
அதன் துறைகள் பலவற்றுள் மகட்பாற்காஞ்சி என்பது ஒன்று. 'நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பால்' என்று தொல்காப்பியம் அதனைக் குறிப்பிடுகிறது. அரசனுக்குப் பெண் தர அஞ்சும் முதுகுடியைப் பெருமைப்படுத்திக் கூறுவது மகட்பாற்காஞ்சி. [2]
மகட்பாற்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 20 உள்ளன. [3] இது பொதுவியல் என்னும் பகுதியில் வரும் துறை.
தொல்காப்பியம் இப் பொருள் மேல் வரும் பாடல்களைக் காஞ்சித்திணையில் அடக்கிக் காட்டுகிறது.[4] புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணமும் தொல்காப்பிய வழியில் செல்கிறது.[5]
- ஒப்பிட்டுக்கொள்வோம். மகள் மறுத்தல்
புறநானூறு
- விரும்பிய வேந்தன் பெருஞ்சினத்தன். தந்தையும் பெண்ணைத் தரமாட்டான். தாய் ஊருக்குப் பகை உண்டாக்கும் இந்தப் பெண்ணை வளர்த்திருக்கிறாளே! [6]
- இவள் பாரி நாட்டுப் பனிச்சுனை போல அரியள். இவளை அமுக்கப்போவது யார்? [7]
- வேம்பு, ஆர், போந்தை அணிந்த வேந்தர் வரினும் மகளைத் தரமாட்டான். [8]
- வேந்தர் நெஞ்சம் கொண்டு ஒளித்தாள். [9]
- ஆனிரை மீட்கும் கரந்தை வீரனுக்கு என வரைந்து சொல்லிவைக்கப்பட்டிருந்தாள். [10]
- இவளால் இந்த ஊர் யானை கலக்கிய குளம் போல் ஆகிவிடுமோ? [11]
- மயிலைக் கண்ணி பெருந்தோள் குறுமகள் யார் மகள்? [12]
- கடல் வணிகத்தால் செல்வம் மிக்க முசிறி அளவு பொருள் தரினும் பெண்ணைத் தரமாட்டான். [13]
- காஞ்சிப் பனிமுறி சூடியவள். [14]
- வந்தோர் பலரே வம்ப வேந்தர். [15]
- இவள் நலன் ஊரைப் பாழாக்கும். [16]
- அகுதை கூடல் நகரம் போல் கூந்தல் உடையவள். [17]
- தாய் இவளைப் பெறாமல் இருந்தால் இந்த ஊருக்குத் துன்பமை இல்லையே. [18]
- மரத்தில் பற்றிய சிறு தீ போல இவள் ஊரைச் சுடுகிறாள். [19]
- வேந்தர் இவளை ஆகத்துச் சுணங்கை அணைத்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறதே! [20]
- கடல் கண்டு அன்ன படை சூழ்ந்திருக்கிறதே! [21]
- உறையூர் போன்ற செல்வம் தந்தாலும் இவளைத் தந்தை தரமாட்டான். [22]
- வல்வில் தொல்குடி மன்ன்ன் மகள். [23]
- வேல் வீரர் வெள்ளம் போல் குவிந்துள்ளனரே! [24]
- இவளால் ஊரே சுடுகாடாகிவிட்டது. [25]
அடிக்குறிப்பு
- ↑ தொல்காப்பியம் 1024
- ↑ தொல்காப்பியம் 1025
- ↑ புறநானூறு 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 356
- ↑
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் (தொல்காப்பியம், புறத்திணையியல் 19) - ↑
ஏந்திழையாள் தருக என்னும்
வேந்தனொடு வேறு நின்றன்று. (புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சித்திணை, 84 - ↑ புறநானூறு 336,
- ↑ புறநானூறு 337,
- ↑ புறநானூறு 338,
- ↑ புறநானூறு 339,
- ↑ புறநானூறு 340,
- ↑ புறநானூறு 341,
- ↑ புறநானூறு 342,
- ↑ புறநானூறு 343,
- ↑ புறநானூறு 344,
- ↑ புறநானூறு 345,
- ↑ புறநானூறு 346,
- ↑ புறநானூறு 347,
- ↑ புறநானூறு 348,
- ↑ புறநானூறு 349,
- ↑ புறநானூறு 350,
- ↑ புறநானூறு 351,
- ↑ புறநானூறு 352,
- ↑ புறநானூறு 353,
- ↑ புறநானூறு 354,
- ↑ புறநானூறு 356