ம. காமுத்துரை
Jump to navigation
Jump to search
ம. காமுத்துரை | |
---|---|
முழுப்பெயர் | ம. காமுத்துரை |
பிறப்பு | 1960 |
பிறந்த இடம் | அல்லி நகரம், |
தேனி மாவட்டம், | |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ம.காமுத்துரை ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழில் வெளியாகும் பல பத்திரிகைகளில் சிறுகதைகள், நாவல்கள் என 1980 களில் இருந்து எழுதி வருகிறார். தேனியில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நூல்கள்
இவர் எழுதி வெளியான நூல்கள்
- விடுபட - சிறுகதைத் தொகுப்பு
- நல்லதண்ணிக் கிணறு - சிறுகதைத் தொகுப்பு
- காமுத்துரை கதைகள் - சிறுகதைத் தொகுப்பு
- கப்பலில் வந்த நகரம் - சிறுகதைத் தொகுப்பு
- நாளைக்குச் செத்துப் போனவன் - சிறுகதைத் தொகுப்பு
- கனா - சிறுகதைத் தொகுப்பு
- பூமணி - சிறுகதைத் தொகுப்பு
- குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - சிறுகதைத் தொகுப்பு
- புழுதிச் சூடு - சிறுகதைத் தொகுப்பு
- முற்றாத இரவொன்றில்.. - நாவல்
- மில் - நாவல்
- கோட்டை வீடு - நாவல்
பரிசுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு
- குமுதம்வெள்ளீவிழா கதைப்போட்டியில் சிறப்பு பரிசு
- சிறந்த சிறுகதைக்கான அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
விருதுகள்
- 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது
- இளங்குயில் இலக்கிய இயக்கத்தின் ஆண்டு விருது
- நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது
- சுஜாதா அறக்கட்டளை – உயிர்மை இதழின் சிறந்த நாவலுக்கான விருது
- ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது
இலக்கிய அமைப்புகளில் ஈடுபாடு
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்