ம. இராசேந்திரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ராஜேந்திரன் |
---|---|
பணி | தமிழ்நாட்டு அரசு அலுவலர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுத்தாளர் இதழாளர் |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | மைதிலி |
பிள்ளைகள் | தென்றல், எழில் |
ம. இராசேந்திரன் (M. Rajendran) தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார். இவர் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக வினையாற்றினார். 2022ஆம் ஆண்டு சனவரியில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகச் சட்டம், விதீகள் திருத்த உயர்நிலைக் குழுவிற்குத் தலைவராக இருந்தார். கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிறப்பு
ம. இராசேந்திரனுக்கு திருவாரூர் மாவட்டம் குடவாயில் சொந்த ஊர் ஆகும். தவிலிசைக் கலைஞர் மகாதேவனுக்கும் ஞானம்பாளுக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இடங்காண்கோட்டை கீழையூர்[1] என்னும் எடகீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்காண்கோட்டை அன்னவாசல் என்னும் எட அன்னவாசல் என்னும் சிற்றூரில் இராசேந்திரன் பிறந்தார்.[2]
கல்வி
ம. இராசேந்திரன் பிறந்த ஓராண்டிற்குள்ளேயே அவர் தந்தை காலமாகிவிட்டார். அதனால் அவர் தன் தாய்மாமன் சு. நடேசன் ஆதரவில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார்.
- தொடக்கக்கல்வியை (1-5 வகுப்புகள்) எட அன்னவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பெற்றார்.
- நடுநிலைக்கல்வியையும் (6-8 வகுப்புகள்) உயர்நிலைக்கல்வியையும் (9-11 வகுப்புகள்) எடமேலையூரில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றார். [3]
- புலவர் பட்டத்தை திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று பெற்றார். அங்கு தி. வே. கோபாலையர் கல்லூரி முதல்வராகவும் இவருக்கு ஆசிரியராகவும் இருந்தார்.[2]
- தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை (Master of Arts) சென்னையிலுள்ள, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.
- ஆய்வியல் நிறைஞர் (Master of Philosophy ) பட்டத்தை, சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் முனைவர் நா. செயப்பிரகாசம் வழிகாட்டலில் "ரா.சீ.யின் நாவல்கள் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். [4]
- முனைவர் (Doctorate) பட்டத்தை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி வழிகாட்டலில் காலின் மெக்கன்சி (1754-1821) சேகரித்த சுவடிகளைப்பற்றி "மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள்" [5]என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1984ஆம் ஆண்டு பெற்றார்.[6]
பணி
இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்[7]:
- துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். - 19.6.2008 ஆம் நாள் முதல் 18.6.2011 ஆம் நாள் வரை.[8][9]
- மதிப்புறு இயக்குநர், திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம். 2009 - 2011[10]
- கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் (Coordinator of the academic committee), உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, 2009 - 2010[11]
- இயக்குநர் (பொறுப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. – சூன் 2006 முதல் சூன் 2008 வரை [12]
- இயக்குநர் (பொறுப்பு), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம். 2008
- தனி அலுவலர் (பொறுப்பு), குறள்பீடம் - 2001-2003
- இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை. – (1.4.1999 முதல் 17.6.2008 வரை)[13]
- இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, சென்னை. 1996 - 1999
- துணை-இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, சென்னை. 1993 - 1996
- ஆய்வுப்பணி தனிஅலுவலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – இரண்டாண்டுகள்
- சிறப்புத்தகைமை விரிவுரையாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். - 1986 - 1989 [6]
- உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி (மாலைநேரம்), சென்னை. 1980-81
- தமிழாய்வாளர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகம், சென்னை. 1974 முதல் 1986.[6]
இடம்பெற்ற குழுக்கள்
இராசேந்திரனை தமிழ்நாடு அரசு பின்வரும் வல்லுநர் குழுக்களில் இடம்பெறச் செய்தது:
- உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2021 [14] , [15]
- உறுப்பினர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2022 [16] [17]
- உறுப்பினர், திராவிடக் களஞ்சியக் குழு, 2022[18]
- தலைவர், தமிழ்நாடு பொதுநூலகச் சட்டத்திருத்த உயர்நிலைக்குழு;[19] 31-01-2022 முதல் [20]
விருதுகள்
இராசேந்திரனின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டு அரசு பின்வரும் விருதுகளை அவருக்கு வழங்கியுள்ளது:
- கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2020; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. [21] [22]
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2021; தமிழ்வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை [23] [24]
படைப்புகள்
நூல்கள்
வ.எண் | வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
01 | 1990 | அந்திப்பொழுதில் | சிறுகதைகள் | தமிழ்ப்புத்தகாலயம், சென்னை | இடம்பெற்றுள்ள கதைகள்: 01 அந்திப்பொழுதில் 02 மாட்டுப்பொங்கல் 03 தனக்குத்தானே 04 திருட்டுமேய்ச்சல் 05 வாய்ச்சோறு 06 சட்டம் 07 ஆதிமூலம் 08 சர்டிபிகேட் 09 பட்டா 10 கும்பாபிஷேகம் 11 மீன்கொத்தி 12 இரத்தம் 13 நோய் |
02 | 1992 | விடிகிற வேளையில் | சிறுகதைகள் | ||
03 | 1994 | குற்றவாளிகள் | சிறுகதைகள் | ||
04 | 1996 | வளர்ப்பு | சிறுகதைகள் | ||
05 | 2002 | காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் | ஆய்வு | கணையாழி படைப்பகம், சென்னை. | |
06 | 2003 | நின்றசொல் | கட்டுரைகள் | கணையாழி படைப்பகம், சென்னை. | |
07 | 2004 | சிற்பியின் விதி | சிறுகதைகள் | கணையாழி படைப்பகம், சென்னை. | |
08 | 2020 | மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள் | ஆய்வு | அடையாளம் பதிப்பகம், புத்தா நத்தம் | விரிவாக்கப்பட்ட பதிப்பு; ISBN : 97888177201789 |
09 | ஓமநதி | சிறுகதைகள் | கவிதா பதிப்பகம்,சென்னை | ||
10 | நினைக்கப்படும் | கவிதா பதிப்பகம்,சென்னை | |||
11 | 2007 | கணையாழி - தலையங்கம் | கட்டுரைகள் | கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை. | |
12 | 2014 | பழவேற்காடு கி.பி.1816 | வரலாறு | தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். | |
13 | 2011 மார்ச்சு 3 | நிகழ்வுகளின் பதிவில் | நினைவுக்குறிப்பு | தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகளின் பட்டியல்[25] | |
14 | 2017 | சொல் புதிது பொருள் புதிது | கலைச்சொல்லாக்கம் | கவிதா பதிப்பகம், சென்னை 17 [26] |
ஆவணப்படங்கள்
- பூம்புகார், ஆவணக் குறும்படம் சென்னைத் தொலைக்காட்சிக்காக
- திரையில் தமிழ் ஆவணக் குறும்படம், சென்னைத் தொலைக்காட்சிக்காக
மொழிபெயர்ப்புகள்
இவரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பின்வரும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன:
- Memory Mist; 2016 Dec 23;Pustaka Digital Media [27]
- TRIO Modern Tamil Stories; 2002; Writer's Workshop, Calcutta.
பதிப்பித்தவை
வ.எண் | வெளியான ஆண்டு | நூலின் பெயர் | வகை | பதிப்பகம் / வெளியிட்டவர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
01 | திருக்குறள் மதுரகீர்த்தனை | இசைப்பாடல்கள் | தமிழ்நாடு அரசு | ||
02 | 1999 | தமிழ்மொழி வரலாறு | கட்டுரைகள் | தமிழ்வளர்சித்துறை, தமிழ்நாடு அரசு | |
03 | 2000 | குறளமுதம் | கட்டுரைகள் | தமிழ்வளர்சித்துறை, தமிழ்நாடு அரசு. | |
04 | 2000 | திருக்குறள் நூல்கள் | நூற்றொகை | தமிழ்வளர்சித்துறை, தமிழ்நாடு அரசு. | |
05 | 1988 | அச்சில் வாரா அருத்தமிழ் ஆத்திசூடி - பரிமேலழகர் உரை | உரை | தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. | இதழ்: உயராய்வு 2 & 3, 1984-85; மு.பதி. 1988 சூன். |
06 | 1981 | காதல்கொத்து | கவிதை | தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு | |
07 | 2000 | ஆட்சிச்சொல்லகராதி: பொது | அகராதி | தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத்துறை | 6ஆம் பதிப்பு, தமிழ்வளர்ச்சித்துறையால் தொகுக்கப்பட்டது. |
08 | அரசினர் கிழக்கியல் சுவடிகள் அட்டவணைகள் | நூற்றொகை | தமிழ்நாடு அரசு | ||
09 | 2005 | எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை | ஆய்வு | உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. | |
10 | 2007 | பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் | ஆய்வு | உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. | |
11 | 2009 | அறிவியலும் தமிழும் | கட்டுரைகள் | தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். | முனைவர் சா. கிருட்டினமூர்த்தி, முனைவர் இராம.சுந்தரம் ஆகியோருடன் இணைந்து [28] |
12 | 2010 | சோழர்கால ஓவியங்கள் | நுண்கலை | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். | |
13 | 2016 | கணையாழி - கவிதைகள் (1995-2000) | கவிதைகள் | கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை. | |
14 | 2016 | கணையாழி - கதைகள் (1995-2000) | கதைகள் | முகவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை. | |
15 | 2016 | கணையாழி - கட்டுரைகள் (1995 -2000) | கட்டுரைகள் | கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை. | |
16 | 2019 | கணையாழி - தொகுதி 1 (1965 சூலை - 1966 சூலை) | இதழ்கள் | கணையாழி படைப்பகம், சென்னை. [29] | |
17 | 2019 | கணையாழி - தொகுதி 2 (1966 ஆகஸ்டு - 1967 சூலை) | இதழ்கள் | கணையாழி படைப்பகம், சென்னை. | |
18 | 2019 | கணையாழி - தொகுதி 3 (1967 ஆகஸ்டு - 1968 சூலை) | இதழ்கள் | கணையாழி படைப்பகம், சென்னை. | |
19 | 2019 | கணையாழி - தொகுதி 4 (1968 ஆகஸ்டு - 1969 சூலை) | இதழ்கள் | கணையாழி படைப்பகம், சென்னை. | |
20 | 2019 | கணையாழி - தொகுதி 5 (1969 ஆகஸ்டு - 1970 சூலை) | இதழ்கள் | கணையாழி படைப்பகம், சென்னை. |
பதிப்பித்த இதழ்கள்
- வெளியீட்டாளர், கணையாழி, 1995ஆம் ஆண்டு முதல்
- Editor, Journal of Tamil studies, 2006-2008, International Institute of Tamil Studies, Chennai.
குடும்பம்
ம. இராசேந்திரனுடன் உடன்பிறந்தவர்கள் இரு பெண்கள். இவர் மைதிலி என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு தென்றல், எழில் என்னும் இரு பெண்மக்களும் மேகனா, கெவின், தில்லானா என்னும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Alphabetical List of Villages in Taluks and Districts of the Madras Presidency; 1933; Re-printed by the Superintendent of Government Press, Madras; Page 586
- ↑ 2.0 2.1 சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்! - தினமணியின் ஞாயிறு கொண்டாட்டம் 2008 சூன், ம. இராசேந்திரன் கி. மஞ்சுளாவிற்கு வழங்கிய செவ்வி
- ↑ தினமணி 2019 செப்டம்பர் 20
- ↑ தமிழியல் ஆய்வு; இராம.பெரியகருப்பன் (தமிழண்ணல்), இ. முத்தையா; முதற் பதிப்பு 1983; பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை; பக்.181
- ↑ தமிழியல்
- ↑ 6.0 6.1 6.2 M. Rajendran is Tamil varisty Vice-Chancellor, The Hindu, 2008 June 15
- ↑ ம. ராசேந்திரனின் தன்விவரக்குறிப்பு
- ↑ தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- ↑ திராவிட மொழியியல் நிறுவனத் தலைவராக ம. ராசேந்திரன்
- ↑ Tamil University VC elected chairman of ISDL, The Hindu, 2009-July-02
- ↑ Ramakrishnan T, 500 scholars called for World Classical Tamil Conference; The Hindu, Chennai; 2009 December 02
- ↑ Journal of Tamil Studies June 2006
- ↑ "தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளம்". https://tamilvalarchithurai.tn.gov.in/?page_id=3472.
- ↑ Madurai Kamaraj University vice-chancellor search committee The Times Bureau, NOV 09,2021]
- ↑ Times of India, Oct 11, 2021
- ↑ News 7 Tamil
- ↑ The Government of Tamil Nadu vide G.O. (D) No.116, Higher Education (K1) Department dated 04th May 2022
- ↑ The Hindu, MARCH 02, 2022
- ↑ [https://tamilnadupubliclibraries.org/ta/public-library-act-committee/ பொதுநூலக இயக்கக வலைத்தளம்
- ↑ தினமணி 2022 சனவரி 27
- ↑ அரசுக் கடித எண்.4031/தவ 1.2./2022-2, நாள்:13-08-2022
- ↑ செம்மொழித் தமிழ்விருதுகள்; தினமணி 2022 ஆகசுடு 22
- ↑ தமிழ்வளர்ச்சித்துறை விருதுகள்; தினத்தந்தி 2022 மார்ச் 16
- ↑ The Hindu 2022 March 15
- ↑ தினமணி, தமிழ்மணி 2011 ஏப்ரல் 3
- ↑ தினமணி - நூலரங்கம் 2017 பிப்ரவரி 13
- ↑ [1]
- ↑ [2]
- ↑ கணையாழி படைத்த இலக்கியத் தடங்கள்; தினமணி கதிர்; 2019 பிப்ரவரி 17