பொற்றாமரைக்குளம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பொற்றாமரைக்குளம்
அமைவிடம்மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தமிழ்நாடு - 625001
ஆள்கூறுகள்9°55′08″N 78°07′11″E / 9.9189°N 78.1196°E / 9.9189; 78.1196
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்165 அடி
அதிகபட்ச அகலம்120 அடி
நீர்க் கனவளவு16 இலட்சம் லிட்டர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்185 மீட்டர்
குடியேற்றங்கள்மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரைக்குளத்தின் மற்றொரு கோணம்

பொற்றாமரைக்குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. தொன்மையான (பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய) பழம்பெரும் நகரம் மதுரை. இக்குளம் செவ்வக வடிவில்,[1] 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம் என்ற சொல், பொன் + தாமரை + குளம் எனப் பொருள் தரும். இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களுமுண்டு[2]. இந்த பொற்றாமரைக் குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன[3].

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் நடுவில் பொற்றாமரைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Meenakshi Sundareshwara Temple". பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  2. "Pottramarai Kulam (the Golden Lotus Pond)". Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  3. "நாரைக்கு முக்தி கொடுத்த நான்மாடக்கூடல் நாயகன்". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.

பிற இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=பொற்றாமரைக்குளம்&oldid=41987" இருந்து மீள்விக்கப்பட்டது