பேசின் பாலம், சென்னை
பேசின் பாலம், சென்னை | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°06′23.5″N 80°16′31.2″E / 13.106528°N 80.275333°ECoordinates: 13°06′23.5″N 80°16′31.2″E / 13.106528°N 80.275333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 28 m (92 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600021 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி மற்றும் கொண்டித்தோப்பு |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | தயாநிதி மாறன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | பி. கே. சேகர் பாபு |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
பேசின் பாலம் (Basin bridge) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்[1][2][3] 13°06′23.5″N 80°16′31.2″E / 13.106528°N 80.275333°E 13.106535°N, 80.275340°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை பேசின் பாலம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கியமான ஊர்களாகும்.
போக்குவரத்து
பேசின் பாலம் பகுதிக்கு அருகில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் உள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், பேசின் பாலத்தின் அருகில் உள்ள சாலைகளான சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக, பல பேருந்து சேவைகளை அளிக்கிறது. பேசின் பாலம் சாலை, இங்குள்ள முக்கியமான சாலையாகும்.[4] பிராட்வே பேருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேசின் பாலம் பகுதிக்கு அருகிலுள்ள, 89 வருடங்கள் பழமையான யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டு, ரூ.30.78 கோடி திட்ட மதிப்பீட்டில் புது பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.[5] இந்த யானை கவுனி பாலம் சீரமைப்பின் காரணமாக, பேசின் பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.[6] சீரமைக்கப்படும் யானை கவுனி பாலம் 156.12 மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும்.[7] பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் ஆகியவற்றால், பேசின் பாலம், தொடருந்து சேவைகளைப் பெறுகிறது. தேசிய இரயில் நிலையங்களில் ஒன்றான புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. மைசூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்ற, தென்னிந்தியாவின் முதலாவது மற்றும் இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் விரைவு இரயில், பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையத்தைக் கடந்து செல்கின்றது.[8] சென்னைக்கும் மைசூருக்கும் இடைப்பட்ட 504 கி.மீ. தூரத்தை 7 மணி நேரத்தில், இந்த இரயில் பயணம் நிறைவு செய்கிறது.[9] மேலும், ரூ.19 கோடி செலவில், வந்தே பாரத் விரைவு இரயில்களுக்காக, பராமரிப்புப் பணிமனை ஒன்று பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கிறது.[10] சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் பேசின் பாலத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அரசியல்
பேசின் பாலம் பகுதியானது, துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி. கே. சேகர் பாபு ஆவார். மேலும் இப்பகுதி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தயாநிதி மாறன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ Muthiah, S. (2008) (in en). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India. Palaniappa Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-468-8. https://books.google.co.in/books?id=tbR_LLkqdI8C&pg=PA36&dq=Basin+Bridge&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjXmqjovsf8AhUE9DgGHf_JCSEQ6AF6BAgCEAM#v=onepage&q=Basin%2520Bridge&f=false.
- ↑ (in en) Sura's Year Book 2006 (English). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7254-124-8. https://books.google.co.in/books?id=Fz2WDD8sB0MC&pg=PA232&dq=Basin+Bridge,+Chennai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj8kvecv8f8AhXl8zgGHQQ9CW8Q6AF6BAgMEAM#v=onepage&q=Basin%2520Bridge%252C%2520Chennai&f=false.
- ↑ GANGULY, NEELA (2019-06-10) (in en). SLUMS OF INDIA. MJP Publisher. https://books.google.co.in/books?id=mYGcDwAAQBAJ&pg=PA124&dq=Basin+Bridge,+Chennai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwj8kvecv8f8AhXl8zgGHQQ9CW8Q6AF6BAgGEAM#v=onepage&q=Basin%2520Bridge%252C%2520Chennai&f=false.
- ↑ Kamath, Rina (2000) (in en). Chennai. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-1378-5. https://books.google.co.in/books?id=bw2vDg2fTrMC&pg=PA200&dq=basin+bridge,+chennai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiSp6XfpMn8AhVU6XMBHXQhDT0Q6AF6BAgIEAM#v=onepage&q=basin%2520bridge%252C%2520chennai&f=false.
- ↑ "Live Chennai: Know the latest regarding the 89 year old Elephant gate bridge in Chennai?,Know the latest regarding the 89 year old Elephant gate bridge in Chennai?". https://www.livechennai.com/detailnews.asp?newsid=63480.
- ↑ "Post Elephant Gate Bridge demolition, Basin Bridge witnesses severe traffic menace". https://www.newindianexpress.com/cities/chennai/2019/nov/26/post-elephant-gate-bridge-demolition-basin-bridge-witnesses-severe-traffic-menace-2067018.html.
- ↑ Special Correspondent (2022-07-29). "Elephant Gate bridge to be ready in three months" (in en-IN). https://www.thehindu.com/news/cities/chennai/elephant-gate-bridge-to-be-ready-in-three-months/article65699727.ece.
- ↑ "PM Modi flags off south India’s first Vande Bharat Express in Bengaluru" (in en). 2022-11-11. https://indianexpress.com/article/cities/bangalore/pm-modi-launch-vande-bharat-first-semi-fast-train-south-8262179/.
- ↑ DT Next Bureau. "Vande Bharat express rolled out of ICF, to reach Mysuru tomorrow" (in en). https://www.dtnext.in/city/2022/11/06/vande-bharat-express-rolled-out-of-icf-to-reach-mysuru-tomorrow.
- ↑ "Basin Bridge gets ready to service Vande Bharat trains". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/sep/13/basin-bridge-gets-ready-to-service-vande-bharat-trains-2497638.html.