பெரிநாக் தேயிலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெரிநாக் செல்லும் வழியில் காணப்படும் தேயிலைச் செடிகள்

பெரிநாக் தேயிலை (Berinag tea) என்பது இலண்டன் தேநீர் விடுதிகளில் மிகவும் விரும்பப்பட்ட தேயிலை என இந்திய பயண எழுத்தாளர் வில்லியம் மெக்கே ஐட்கென் மற்றும் புகழ்பெற்ற சுவை மனிதர் லாரி பேக்கர் ஆகியோரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பெரிநாக் தேயிலைத் தோட்டமானது கேதார் தத் பந்த் என்பவரிடமிருந்து தாக்கூர் தன் சிங் பிஸ்த் என்பவரால் வாங்கப்பட்டது ("பிஷ்ட்" என்றும் உச்சரிக்கப்படுகிறது).[1] இந்தியாவில் அறப்பணிகளை செய்துவரும் தாக்கூர் தன் சிங் பிஸ்துக்கு சொந்தமான டி.எஸ். பிஸ்த் & சன்ஸ்,[2] என்ற ஒரு நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. 1900களின் பிற்பகுதியிலிருந்து 1964இல் அவர் இறக்கும் வரை, தன்சிங் பிஸ்த் சீனா, இந்தியா மற்றும் இலண்டனில் தேயிலை தேடி வந்தார். இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு தேயிலைத் தோட்டமானது குடியேறிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலாலும் கையகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், பெரிநாக் நகரம் தேயிலைத் தோட்டமாக மாறியது. [3] தாக்கூர் தன் சிங் பிஸ்த் இறக்கும் வரை, பெரினாக் நாட்டின் சிறந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாக இருந்தது..

பெரினாக் தேயிலை இமயமலையில் பல இடங்களில் வளரும் ஒரு காட்டுத் தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.[4] இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் கிழக்கு இமயமலை மாவட்டத்தில் வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போது சௌகோரியில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இது பிரிட்டிசாரால் நிறுவப்பட்ட தேயிலைத் தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. பெரிநாக் தேயிலை என்ற வர்த்தக பெயர் ஒரு சீன வகையிலிருந்து உருவானது.[1] புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணரும் சுவை மனிதனுமான லாரி பேக்கர், பெரிநாக் தேயிலையை தனது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருந்தார்.[5]

பெரிநாக் தேயிலை நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

பெரிநாக் தேயிலை என்பது கல்லால் நசுக்கப்பட்டு தயாரிக்கும் தேயிலை ஆகும். இது திபெத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.[4] குமாவுனில் தேயிலையை வெற்றிகரமாக பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஒரு நிபுணர் குழு 1827இல் நியமிக்கப்பட்டது. 1950களில் ஒரு தேயிலை தோட்டம் அங்கு அமைக்கப்பட்டது. பெரிநாக் தேயிலை நிறுவனத்தின் மேலாளர் சீனாவின் தேயிலை தயாரிக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தார். மேலும் இவரது தேயிலை சீன வகையை விட மிக உயர்ந்ததாக கருதப்பட்டது. 1907ஆம் ஆண்டில், அவர் சுமார் 54 குவிண்டால் தேயிலையை உற்பத்தி செய்தார். ஆனால், பின்னர் படிப்படியாக வர்த்தகம் குறைந்தது. 1960 வாக்கில் ஒரு சிறிய தேயிலைத் தோட்டம் மட்டுமே தப்பிப்பிழைத்தது. [6]

தரமும் சுவையும்

குமாவுனில் உள்ள அனைத்து தோட்டங்களிலும், பெரிநாக் மற்றும் சௌகோரி தோட்டங்களின் தேயிலை தரம் மற்றும் சுவைக்கு மிகவும் பிரபலமாக இருந்தன. இந்தத் தோட்டங்கள் பின்னர் தாக்கூர்தன் சிங் பிஸ்தா கையகப்படுத்தப்பட்டன. [7] தற்செயலாக, பெரிநாக் தேயிலை நிறுவனத்தின் மேலாளர் சீனாவின் தேயிலை தயாரிப்பதற்கான இரகசியத்தை கண்டுபிடித்தார். லாசா வழியாக மேற்கு திபெத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனத் தேயிலையை விட அவரது தேநீர் பாரபட்சமற்ற போதியா வர்த்தகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக இந்த வகைத் தேயிலை பழைய தலைமுறையினரைத் தவிர பிற அனைவராலும் மறக்கப்பட்டது. 1964இல் தாக்கூர் தன் சிங் பிஸ்தின் தற்செயலான மரணம் ஒரு வாரிசு இல்லாததால் இது மெல்ல மெல்ல மறைந்தது. ஆக்கிரமிப்பு மூலம் தோட்டம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் நகரமாகவும், புதிதாக அறிவிக்கப்பட்ட பெரிநாக் நகராட்சியாகவும் மாறியது. வில்லியம் மெக்கே ஐட்கன் குறிப்பிடுவது போல, "பெரிநாக் தேநீர் ஒரு காலத்தில் இலண்டன் தேநீர் தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்பட்டது".

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Tourist Spots". Themistymountains.in இம் மூலத்தில் இருந்து 16 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150416101439/http://www.themistymountains.in/wp-content/uploads/2013/07/toi.pdf. பார்த்த நாள்: 2015-04-16. 
  2. "Tea Board of India Licensing Department". Teaboard.gov.in. http://www.teaboard.gov.in/pdf/directory/Registered_Tea_Estate.pdf. பார்த்த நாள்: 2015-04-16. 
  3. "U'khand tea: Raj days' flavour goes brandless". Hindustantimes.com. 2014-09-17 இம் மூலத்தில் இருந்து 2015-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150417225244/http://www.hindustantimes.com/dehradun/u-khand-tea-raj-days-flavour-goes-brandless/article1-1256669.aspx. பார்த்த நாள்: 2015-04-16. 
  4. 4.0 4.1 "Full text of "Western Tibet and the British Borderland: The Sacred Country of Hindus and Buddhists, with an ..."". https://archive.org/stream/westerntibetand00shergoog/westerntibetand00shergoog_djvu.txt. பார்த்த நாள்: 2015-04-16. 
  5. Baker, Elizabeth (2007-01-01). The Other Side of Laurie Baker - Elizabeth Baker - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126415526. https://books.google.com/books?id=rGE75CDnyUwC&q=berinag+laurie+baker+tea&pg=PA105. பார்த்த நாள்: 2015-04-16. 
  6. "Berinaag - WikiUttarakhand". Bedupako.wikifoundry.com இம் மூலத்தில் இருந்து 2015-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150416102623/http://bedupako.wikifoundry.com/page/Berinaag. பார்த்த நாள்: 2015-04-16. 
  7. "Uttarakhand Worldwide • View topic - Have a Cup of Tea". Uttaranchal.org.uk. 2005-08-05 இம் மூலத்தில் இருந்து 25 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825202023/http://www.uttaranchal.org.uk/uforums/viewtopic.php?f=18&t=1334. 
"https://tamilar.wiki/index.php?title=பெரிநாக்_தேயிலை&oldid=28998" இருந்து மீள்விக்கப்பட்டது