பெங்களூர் இலதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெங்களூர் இலதா
இலதா.jpg
இலதா
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெங்களூர், மைசூர் அரசு, (தற்போது கருநாடகம்), இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்பாட்டு
இசைத்துறையில்1962–1990
வெளியீட்டு நிறுவனங்கள்சுயாதீனக் கலைஞர்

பி. ஆர். லதா (B. R. Latha) பிரபலமாக பெங்களூர் லதா (Bangalore Latha) எனப்படும் இவர் தென்னிந்திய திரையுலகில், முக்கியமாக கன்னடம் மற்றும் தெலுங்கில் பணியாற்றிய இந்திய பாடகராவார்.[1] [2] [3]

ஆரம்ப ஆண்டுகள்

இவர், ராஜ்குமார், கிருஷ்ண குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 1962ஆம் ஆண்டு வெளியான மகாத்மா கபீர் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[4]

இவர், பி. பி. ஸ்ரீனிவாஸ்,[1] எஸ். பி. பாலசுப்பிரமணியம்,[5] எம். பாலமுரளி கிருஷ்ணா, ராஜ்குமார், எஸ். ஜானகி, வாணி ஜெயராம், பி. கே. சுமித்ரா, முசிறி கிருஷ்ணமூர்த்தி, சங்கர் நாக், விஷ்ணுவர்தன் ஆகியோருடன் இணைந்து பாடல்களை பாடியுள்ளார்.[6]

தெலுங்கு

Singer Bangalare Latha.jpeg

இவர், தனது சில சிறந்த பாடல்களை தெலுங்கிலும் வழங்கியுள்ளார். எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்து 1963ஆம் ஆண்டு வெளியான "நர்த்தனாசாலா" படத்தில் இடம் பெற்ற சலலிதா ராக சுதரச சாரா என்ற பாடலை எம். பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்து பாடியது மிகவும் பிரபலமானது.

சொந்த வாழ்க்கை

இவர், பெங்களூரில் பிறந்தார். இவர் நடிகரும் பாடகருமான தக்காளி சோமுவை மணந்தார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெங்களூர்_இலதா&oldid=8990" இருந்து மீள்விக்கப்பட்டது