பூமிகா (திரைப்படம்)
பூமிகா | |
---|---|
"பூமிகா" சுவரொட்டி | |
இயக்கம் | சியாம் பெனகல் |
தயாரிப்பு | லலித் எம். பிஜ்லானி ஃபிரெனி வரியவா |
கதை | சியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், சத்யதேவ் துபய்(dialogue) |
இசை | வன்ராஜ் பாட்டியா மச்ரூக் சுல்தான்புரி வசந்த் தேவ்(பாடல்கள்) |
நடிப்பு | சுமிதா பட்டீல் அமோல் பலேகர் அனந்த் நாக் அம்ரீஷ் பூரி |
ஒளிப்பதிவு | கோவிந்த் நிக்லானி |
படத்தொகுப்பு | பானுதாஸ் திவாகர் இராம்னிக் படேல் |
விநியோகம் | செமாரூ மூவீஸ் |
வெளியீடு | 11 நவம்பர் 1977(இந்தியா) |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பூமிகா (Bhumika) என்பது 1977 ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இப்படத்தில் ஸசுமிதா பாட்டீல், அமோல் பலேகர், அனந்த் நாக், நசீருதீன் ஷா மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் மராத்தி மொழி பிரபலமான நன்கு அறியப்பட்ட, ஒரு பரபரப்பான மற்றும் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையை நடத்திய மராத்தி மேடையின் சாங்டியே அய்காவின் நடிகை மற்றும் 1940களின் திரை நடிகை ஹன்சா வட்கர் என்பவரின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். ஹன்சா வட்கர் ஒரு நபரின் அடையாளம் மற்றும் சுய-நிறைவுக்கான தேடலில் கவனம் செலுத்துகிறார். [1] சுமிதா பாட்டீல் ஒரு துடிப்பான பதின்பருவ புத்திசாலித்தனமான பெண்ணாகத் தொடங்கி ஆழமாக காயப்பட்ட நடுத்தர வயதுப் பெண்ணாக மாறுவது வரையிலான கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வழங்கியிருந்தார்.
இப்படம் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஃபிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதையும் வென்றது. இது கார்தேஜ் திரைப்பட விழா 1978, சிகாகோ திரைப்பட விழாவிற்கு போன்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டது. அங்கு அதற்கு கோல்டன் பிளேக் விருது 1978-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. மேலும் 1986 இல் இது அல்ஜீரியாவின் படங்களின் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டது.[2]