பூதம்புல்லனார்
Jump to navigation
Jump to search
பூதம்புல்லனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 190 ஆகும்.
பாடல் சொல்லும் செய்தி
- அவர் செய்பொருட்கு அகன்றார்.
- என் கூந்தல் வாரி முடிக்காமல் என் தோளோடு கிடக்கிறது. ஆனால் வளையல் மட்டும் தோளிலிருந்து கழல்கிறது. இதனை அவர் அறிவார்.
- அவர் இதனையும் அறிவார். பாம்பு படமெடுத்து ஆடும்போது இடி இடித்தால் அதன் படம் தானே சுருங்கிவிடும்.
- அரிமா நடமாட்டம் தெரிந்தால் பாதுகாப்பில் இருக்கும் பசுவின் மணியொலி கேட்கும். அதனைக் கேட்டுக்கொண்டு அவள் உறங்காமல் கிடப்பாள் என்பதும் அவருக்குத் தெரியும். (அவர் சொன்ன இடிமுழக்கக் காலம் வந்துவிட்டதே! திரும்பவேண்டுமே! என்பது மட்டும் அவருக்குத் தெரியவில்லை - என்று தலைவி நினைக்கிறாள்.)