புழுவியல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

புழுவியல் (Vermeology) என்பது வெர்மியாலஜி எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். இலத்தீன் மொழியில் வெர்ம்சு, என்பது புழுக்களைக் குறிக்கும். எனவே புழுவியல் புழுக்களின் ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உயிரியல் துறையாகும்.[1] புழுக்களைப் பற்றி ஆய்வு/படிக்கும் ஒருவர் வெர்மியாலஜிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார்.

"வெர்மியாலஜி" என்ற பொதுவான சொல் பொதுவான பயன்பாட்டிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. ஏனெனில் புழுக்கள் என்று அழைக்கப்படும் விலங்குகள் நெருங்கிய தொடர்பில்லாத பல தொகுதிகளைச் சேர்ந்தவை. வெர்மியாலஜியின் துணைப் பிரிவுகளில் உருளைப்புழு பற்றிய ஆய்வு, ஒலிகோகீட்டாலஜி[2] (லும்பிரிகாலஜி[3]) என்று அழைக்கப்படுகிறது. மண்புழுக்களின் ஆய்வு மற்றும் குடற்புழுவியல்[4] ஆகியவையும் அடங்கும். இதில் ஓட்டுண்ணிப் புழுவியல் என்றும் அழைக்கப்படும் ஆய்வு ஒட்டுண்ணி புழுக்களை மையமாகக் கொண்டுள்ளது. நத்தையினவியல் துறையும் வரலாற்று ரீதியாக புழுவியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

சார்லசு டார்வின் தனது வாழ்நாளில் வெளியிட்ட இறுதி புத்தகம் மண்புழுக்களின் உயிரியல் சுழற்சியை மையமாகக் கொண்டது.

மேற்கோள்கள்

  1. Hall, William Henry (1789). "Vermeology". The New Royal Encyclopaedia; or, Complete Modern Universal Dictionary of Arts & Sciences, on a New and Improved Plan in which All the Respective Sciences, are Arranged into Complete Systems, and the Arts Digested into Distinct Treatises. Vol. III. London. Retrieved 2024-02-09.
  2. Pavlíček, Tomáš; Csuzdi, Csaba; Szederjesi, Tímea (2023-03-15). "Ibrahim Mete Misirlioǧlu (1972–2021), the father of Oligochaetology in Turkey". Zootaxa 5255 (1): 7–9. doi:10.11646/zootaxa.5255.1.4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:37045274. https://mapress.com/zt/article/view/zootaxa.5255.1.4. 
  3. Reynolds, J.F. (1995-02-22). "The Status of Exotic Earthworm Systematics and Biogeography in North America". In Hendrix, Paul F. (ed.). Ecology and Biogeography of Earthworms in North America. Boca Raton, FL: Lewis Publishing. pp. 1–27. ISBN 978-1566700535.
  4. Kassai, Tibor (1999). Veterinary helminthology. Oxford: Butterworth-Heinemann. ISBN 978-0-7506-3563-9.
"https://tamilar.wiki/w/index.php?title=புழுவியல்&oldid=445442" இலிருந்து மீள்விக்கப்பட்டது