புலத்துறை
Jump to navigation
Jump to search
புலம் என்பது நுண்ணறிவு. விளைவை எண்ணிப் பார்க்கும் அறிவு. புலன் என்பது ஐம்புலன்களால் உணரப்படும் அறிவு. புல அறிவைப் புலத்துறை என்றனர். பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை, வரலாற்றுத் துறை என்றெல்லாம் வழங்குவது ஒருவகைப் புலத்துறை. ஆட்சி முறையில் கல்வித்துறை, வருவாய்த்துறை என்றெல்லாம் வழங்குவது மற்றொருவகைப் புலத்துறை.
பாடுதுறை, [1][2] என்பன போன்று பல துறைகள் பண்டைக் காலத்தில் இருந்தன.
துறைபோதல் என்னும் தொடர் குறிப்பிட்ட பகுதியில் முற்றறிவு பெறுதல். அறிஞர்களைக் கல்வியில் துறைபோனவர் என்பது வழக்கு. கரிகாலன் மன்னர்களிடம் திறை வாங்குவதில் துறைபோனவன் எனக் குறிப்படப்படுகிறான். [3]
அடிக்குறிப்பு
- ↑ யாழிசைத் துறை
- ↑
அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி (சிறுபாணாற்றுப்படை 227 முதல்) - ↑ 'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ! (பட்டினப்பாலை 120)