புருடோத்தம நம்பி
Jump to navigation
Jump to search
புருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.
சிவன் மீது பற்று
இவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.[1] நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார்.
சிதம்பரம்
இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.
காலம்
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.[1]