புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் ஆலயம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

வரலாறு

முன்பு இந்த இடம் ஜட்ஜ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.[1]. புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936-ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.[2]

புவனேஸ்வரி மற்றும் அஷ்டதச புஜ லட்சுமி

அன்னை புவனேஸ்வரிக்கு நேர் எதிரில் அஷ்டதச புஜ லட்சுமி.இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமுண்டீஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.

கோவில் விதிமுறைகள்

கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது. நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடைபெறும். கற்பூர ஆரத்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. நடுவில் தரிசனம் மட்டும்தான்.

கோவில் சிறப்பு

கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக இருப்பது சிறப்பு.

இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக் கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும் இல்லாத மஞ்சள் குங்குமம்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால் அமைக்கப்பட்டதுதான். சேலம் ஸ்கந்தாஸ்ரமமும் இந்த அமைப்பினருடையதுதான்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்