பிரமசாரி
Jump to navigation
Jump to search
பிரமசாரி ஒரு சங்ககாலப் புலவர். இவரது பாடல் என்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 34.
பாடல் சொல்லும் செய்தி
- முருகே! நாடன் மார்பு அணைக்காமையால் இந்த நோய் எனக்கு வந்ததென்று உனக்குத் தெரியுமே! அப்படியிருந்தும் கடம்பு மாலையைப் போட்டுக்கொண்டிருக்கும் வேலன் வேண்டினான் என்று அவன் வெறியாடும் என் மனைக்கு வந்திருக்கிறாய். நீ "கடவுள் ஆயினும் ஆக. மடவை மன்ற வாழிய முருகே" என்று கூறித் தோழி வெறியாட்டுவதை விலக்குகிறாள்.
நாடன்
- கடவுட் கற்சுனையில் பூத்த குவளை மலரையும், மலையில் பூத்த காந்தள் மலரையும் சேர்த்துக் கட்டிய மாலையை அணிந்துகொண்டு சூர்மகள் அருவி ஆடும் நாடன் அவன்.